சோனியா - ராகுலுக்கு பெரிய நிம்மதி.. நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை ஏற்க மறுத்த கோர்ட்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு நேஷனல் ஹெரால்டு வழக்கு பெரும் தலைவலியாக உள்ளது. பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கால் தற்போது அவர்கள் சிக்கலில் சிக்கி உள்ளனர். இதுபற்றி அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு சொத்துகளை முடக்கி வரும் நிலையில் இன்று திடீரென்று அதன் குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதனால் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ‛நேஷனல் ஹெரால்டு' என்ற பத்திரிகையை தொடங்கினார். இதனை நடத்தி வந்த ‛அசோசியேடட் ஜர்னல்ஸ்' நிறுவனம் மூடப்பட்டது. நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்கு சட்டவிரோதமாக ‛யங் இந்தியா' என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது.

‛யங் இந்தியா' நிறுவனத்தின் பங்கில் 76 சதவீதம் என்பது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் தான் உள்ளது. சோனியா காந்தி 38 சதவீத பங்கையும், ராகுல் காந்தி 38 சதவீத பங்கையும் வைத்துள்ளனர். இதனால் பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை வெறும் 50 லட்சம் செலவில் மாற்றிவிட்டனர் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
‛யங் இந்தியா' நிறுவனத்தின் பங்கில் 76 சதவீதம் என்பது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் தான் உள்ளது. சோனியா காந்தி 38 சதவீத பங்கையும், ராகுல் காந்தி 38 சதவீத பங்கையும் வைத்துள்ளனர். இதனால் பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை வெறும் 50 லட்சம் செலவில் மாற்றிவிட்டனர் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
அதோடு சுப்பிரமணியன் சுவாமி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அப்போது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகார் வந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை சுப்பிரமணியன்சுவாமி புகாரின் அடிப்படையில் உள்ளே நுழைந்தது. அமலாக்கத்துறை சொத்து முடக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு சொந்தமான பல நூறு கோடிக்கு மேலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது.
அதுமட்டுமின்றி வழக்கு தொடர்பாக ரோஸ் அவென்யூவில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களின் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதனை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகாரில் தான் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
தனிநபர் குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு உள்ளதால் குற்றப்பத்திரிகை ஏற்க முடியாது என நீதிமன்றம் கூறிவிட்டது. இது அமலாக்க்ததுறைக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு பெரும் நிம்மதியாக பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், இன்னொரு சிக்கல் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது, கடந்த மாதம் இறுதியில் அமலாக்கத்துறை சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக ‛நேஷனல் ஹெரால்டு’ வழக்கு தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சோனியா காந்தி, ராகுல் காந்தி, சாம்பிட்ரோடா உள்பட 6 பேர் மீது புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சாம் பிட்ரோடோ காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு தலைவராக செயல்பட்டவர். இவர்கள், தவிர வழக்கில் ஏஜேஎல், யங் இந்தியன் மற்றும் கொல்கத்தாவை தளமாக கொண்ட ஷெல் நிறுவனமான டோடெக்ஸ் மெர்ச்சண்டைஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்பட மற்றவர்கள் முதல் தகவல் அறிக்கை (FIR) கேட்டனர். ஆனால் நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கை (FIR) நகல் வழங்கப்படாது என்று நீதிமன்றம் கூறியது. அதே சமயம் அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தொடர அனுமதி வழங்கியது. இது சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications