கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை வைஷாலிக்கு அர்ஜுனா விருது.. மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான 2023ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி பேட்மிண்டன் வீரர்கள் 2 பேருக்கு மேஜர் தயான்சந்த் கேல் விருதும், இந்திய கிரிக்கெட் வீரர்கள் முகமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனையான பிரக்யானந்தாவின் சகோதரி வைஷாலிக்கு உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு துறையில் சாதிப்பவர்களுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் பெறும் வீரர்களின் பட்டியலை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி பேட்மிண்டன் விளையாட்டில் சிறப்பாக செயல்பட்ட சிராக் சந்திரசேகர் ஷெட்டி, ராங்கிரெட்டி சாத்விக் சாய்ராஜ் ஆகியோர் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுதுவிர இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உள்பட 26 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஒஜாஸ் பிரவீன் டியோதாள் (ஆர்ச்சரி), அதிதி கோபிசந்த் ஸ்வாமி (ஆர்ச்சரி), ஸ்ரீசங்கர் (தடகளம்), பார்ல் சவுத்ரி (தடகளம்), முகமது ஹுசாமுதீன் (பாக்சிங்), ஆர். வைசாலி (செஸ்), முகமது ஷமி (கிரிக்கெட்), அனுஷ் அகர்வால் (Equestrian), திவ்யகீர்த்தி சிங் (Equestraina Dressage), திக்சா தாகர் (கோல்ப்), கிருஷ்ணன் பஹதுர் பதாக் (ஹாக்கி), புக்ராம்பம் சுசிலா சானு (ஹாக்கி) உள்ளிட்டவர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட உள்ளது.
இதில் வைஷாலி என்பவர் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனையாவார். இவர் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார். சமீபத்தில் செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலிக்கு தற்போது மத்திய அரசு அர்ஜுனா விருது அறிவித்துள்ளது. கடந்த முறை பிரக்ஞானந்தா அர்ஜுனா விருது வென்ற நிலையில் இந்த முறை அவரது சகோதரிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
மேலும் பவன் குமார் (கபடி), ரிது நேகி (கபடி), நஸ்ரின் (கோகோ), பிங்கி (லான் பவுல்ஸ்), ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர் (சூட்டிங்), இஷா சிங் (சூட்டிங்), ஹரிந்தர் பால் சிங் சந்து (ஸ்குவாஷ்), ஆயிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்), சுனில் குமார் (ரெஸ்ட்டிலிங்), நோரம் ராஷிபினா தேவி (வுஷூ), ஷித்தல் தேவி (பாரா ஆர்ச்சரி), இல்லுரி அஜய் குமார் ரெட்டி (பார்வையற்றோர் கிரிக்கெட்), பிராசி யாதவ் (பாரா கானோயிங்) உள்ளிட்டவர்களும் அர்ஜுனா விருதுக்கு வழங்கப்பட உள்ளது.
இவர்களுக்கு 2024 ஜனவரி மாதம் 9ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் விருது வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications