அமித்ஷா ராஜினாமா கோரி நாடாளுமன்றம் முடக்கம்! சுவரில் ஏறி இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!
டெல்லி: அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்; ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளையும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று முடக்கி வைத்தனர். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை நோக்கி இந்தியா கூட்டணி எம்பிக்கள் பேரணியாக சென்றனர். இந்தப் பேரணியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் நீல நிற உடை அணிந்து பங்கேற்றனர். மேலும் இந்தியா கூட்டணியைக் கண்டித்து பாஜக எம்பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற ராஜ்யசபாவில் அரசியல் சாசனம் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசினார் என்பது இந்தியா கூட்டணியின் குற்றச்சாட்டு. அதாவது அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர் என பேஷனுக்காக கோஷம் போடுகின்றனர்.. இதற்கு பதிலாக கடவுள் பெயரை உச்சரித்திருந்தால் சொர்க்கமாவது கிடைக்கும் என்று அமித்ஷா பேசியதாக இந்தியா கூட்டணி எம்பிக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்; அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது இந்தியா கூட்டணி எம்பிக்கள் கோரிக்கை.
இதனை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நிராகரித்தனர்.
அதேநேரத்தில் அமித்ஷாவை டிஸ்மிஸ் செய்ய கோரி நேற்று முதல் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காங்கிரஸை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி எம்பிக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் நேற்று ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை நோக்கி இந்தியா கூட்டணி எம்பிக்கள் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் நீல நிற உடை அணிந்திருந்தனர்.
#WATCH | Delhi: MPs of INDIA Alliance climb the walls of Makar Dwar at the Parliament and protest with placards demanding an apology and resignation of Union Home Minister Amit Shah over his remarks on Babasaheb Ambedkar in Rajya Sabha. pic.twitter.com/Bd9UAEkMKX
— ANI (@ANI) December 19, 2024
அம்பேத்கரை பின்பற்றுகிறவர்கள் நீல நிறக் கொடி, உடை அணிவது வழக்கம். இதனைக் குறிப்பிடும் வகையில் நீல நிற உடையை ராகுலும் பிரியங்கா காந்தியும் அணிந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் கூடிய போதும் இரு சபைகளிலும் இந்தியா கூட்டணி எம்பிக்கள், அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. .
நாடாளுமன்றத்தின் இரு சபைகல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். சில எம்பிக்கள் நாடாளுமன்ற கட்டிட சுவரில் ஏறி நின்று கொண்டு அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல அம்பேத்கரை காங்கிரஸ் இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டி பாஜக எம்பிக்களும் நாடாளுமன்ற வ் வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
-
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications