வேப்பிலை, மஞ்சள் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் பஞ்சாய் பறந்துவிடும்! நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சை
டெல்லி: தனது மனைவிக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும் அதற்கு 40 நாட்களுக்கு வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை கொடுத்து தற்போது பூரணமாக குணமாகிவிட்டதாகவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நவ்ஜோத் சிங் சித்துவின் கூற்று ஆதாரமற்றது. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாதது என டாடா மெமோரியல் மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர். இவருக்கு மார்பக புற்றுநோய் 4ஆவது நிலையில் இருந்த நிலையில் இவர் தற்போது எப்படி மீண்டு வந்தார் என்பது குறித்து சித்து ஒரு வீடியோவில் உணர்ச்சி பொங்க கூறியிருப்பது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வீடியோவில் சித்து My Wife is clinically free today என அவர் பேச ஆரம்பிக்கிறார். அவர் மேலும் பேசுகையில் இரு ஆண்டுகளுக்கு முன் என் மனைவிக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டது. அது 4ஆவது நிலை என தெரிவித்தனர்.
எத்தனையோ கோடிகளை செலவு செய்து பெரிய பெரிய மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்தோம். ஆனால் மருத்துவர்களோ கவுர் உயிர் பிழைக்க 3 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தனர்.
இதையடுத்து எனது நண்பரின் மகன் அமெரிக்காவில் புற்றுநோய் மருத்துவராக இருக்கிறார். அவரும் என் மனைவி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என கூறிவிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் எனது மனைவிக்கு மூன்றரை மணி நேரம் மார்பக பகுதியில் ஆபரேஷன் செய்தனர்.
அது சிக்கலான அறுவை சிகிச்சையாக இருந்தாலும் அவர் தைரியமாகத்தான் இருந்தார். இதனால் சிகிச்சைகளை விட்டுவிட்டு உணவு மூலம் கேன்சரை கட்டுப்படுத்த முடிவு செய்தோம். இதனால் என் மனைவிக்கு நான் வேப்பிலைகள், கட்டி மஞ்சள், எலுமிச்சை, தேங்காய் ஆகியவற்றை கொடுக்கத் தொடங்கினேன்.
இந்த உணவுகளை எடுத்துக் கொண்டாலே கேன்சர் குணமாகும். சில நாட்கள் வரை சர்க்கரை, மாவுச்சத்து உணவுகளைத் தவிர்த்தோம். காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை ஜூஸ் கொடுத்துவிடுவோம். மாலை 6 மணிக்குள் இரவு உணவை எடுத்துக் கொள்வார். இவ்வாறு 40 நாட்கள் செய்தாலே கேன்சரை குணப்படுத்த முடியும்.
வாழ்க்கை முறையை மாற்றினால் கேன்சரை குணப்படுத்த முடியும்.இதை உங்களிடம் சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன் என சித்து தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு டாடா மெமோரியல் மருத்துவமனை நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் புற்றுநோய் குறித்து நவ்ஜோத் சிங் சித்துவின் கூற்று ஆதாரமற்றது. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாதது என மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications