பெண்களுக்கு சம உரிமை, கவுரவம், அதிகாரம் அவசியம்: துர்கா பூஜை வாழ்த்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு
டெல்லி: "பெண்களை சமமான மற்றும் கெளரவமான பங்காளிகளாக மாற்றுவதன் மூலம் நாம் அவர்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும்" என்று துர்கா பூஜை வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வலியுறுத்தி உள்ளார்.
துர்கா பூஜையை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட வாழ்த்தச் செய்தி: துர்கா பூஜையை முன்னிட்டு, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது இதயம் கனிந்த துர்கா பூஜை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

துர்கா பூஜை நோக்கம்: துர்கா பூஜை பண்டிகை தீமைக்கு எதிராக நன்மையின் வெற்றியையும், அறியாமைக்கு எதிராக விழிப்புணர்வையும், பொய்க்கு எதிராக உண்மையையும் குறிக்கிறது. பல வடிவங்களில் வழிபடப்படும் துர்க்கை, பிரிவினை மற்றும் அழிவு சக்திகளை விலக்கி வைக்கும் சக்தியை நமக்கு அளிக்கிறது
பெண்களுக்கு சம உரிமை: அறநெறிப் பாதையைப் பின்பற்றி சமுதாய நலனுக்காகப் பாடுபட அன்னை துர்க்கையைப் பிரார்த்திக்கிறேன். தேசத்தைக் கட்டமைப்பதில் பெண்களை சமமான மற்றும் கெளரவமான பங்காளிகளாக மாற்றுவதன் மூலம் நாம் அவர்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும். நல்ல நடத்தை மற்றும் சேவை மனப்பான்மையுடன் நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக பாடுபடுவோம் என்று உறுதியேற்போம். இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி: துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: அனைவருக்கும் எனது இதயம் கனிந்த துர்கா பூஜை திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் இந்த பண்டிகை, அன்னை துர்க்கையின் அசைக்க முடியாத உணர்வையும், தீமைக்கு எதிரான நன்மையின் நித்திய வெற்றியையும் நமக்கு நினைவூட்டுகிறது.
அறப் பாதையில் ஒற்றுமை: இந்த புனித நிகழ்வின் துடிப்பான கொண்டாட்டங்கள் மற்றும் கலாச்சார செழுமையில் நாம் நம்மை மூழ்கடித்துக் கொண்டிருக்கும்போது, துன்பங்களை அசைக்க முடியாத உறுதியுடன் எதிர்கொள்ளவும், அறத்தின் பாதையில் ஒற்றுமையாக நிற்கவும் தேவி அன்னையிடமிருந்து உத்வேகம் பெறுவோம். அன்னை துர்க்கை நம் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை வழங்கட்டும். இவ்வாறு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications