குடும்பத்தினருக்கு தெரியாமல் உடலை எரித்தது ஏன்... உத்தரப் பிரதேச டிஜிபிக்கு பெண்கள் கமிஷன் நோட்டீஸ்!
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இறந்த பின்னர் அவரது உடலை குடும்பத்தினர் இல்லாமல் எரித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு அந்த மாநில டிஜிபிக்கு தேசிய பெண்கள் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கான விளக்க அறிக்கையை விரைவில் தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று இந்தக் கமிஷன் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

வயல்வெளி
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உயர் வகுப்பைச் சேர்ந்த நான்கு இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தார். கடந்த 14ஆம் தேதி வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, இவரை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

சப்தர்ஜங்
உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு இருந்த நிலையில், முதலில் அலிகார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து டெல்லியில் இருக்கும் சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

போலீசார்
அவரது உடலை குடும்பத்தினரிடம் கொடுக்காமல் போலீசார் நள்ளிரவில் எரித்தனர். இது தேசிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில், இந்தப் பெண் கடுமையாக தாக்கப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது.

ரத்தம்
பிரேத அறிக்கையில், ''முதுகு தண்டுவடத்தில் சி6ல் முறிவு ஏற்பட்டு உள்ளது. அந்த இடத்தில் ரத்தமும் வெளிப்பட்டுள்ளது. அவரது கழுத்தும் நெறிக்கப்பட்டுள்ளது, இதற்கான தழும்புகள் அவரது கழுத்தில் ஏற்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.

நோட்டீஸ்
இந்த நிலையில்தான், அவரது குடும்பத்தினருக்கே தெரியாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை எரித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு உத்தரப் பிரதேச மாநில டிஜிபிக்கு தேசிய பெண்கள் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications