சொத்துக்காக மனைவியால் கொல்லப்பட்ட என்.டி.திவாரி மகன்..போலீஸ் அதிரடி நடவடிக்கை..
டெல்லி: உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் என்டி திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில், அவரது மனைவி அபூர்வாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் முதல்வராக இருந்தவர் என்.டி.திவாரி. இவரது மகன் ரோகித் சேகர் திவாரி ஆவார். இவர் அபூர்வா என்பவரை திருமணம் செய்த கொண்டு தனியாக வசித்து வந்தார்.

தனியாக வசித்து வந்தாலும் கணவன் - மனைவி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாக கூறப்படுகிறது. எனவே இதன் காரணமாக, ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்து வந்துள்ளனர்
இந்நிலையில் ரோகித் சேகர் திவாரி கடந்த வாரம் அவரது வீட்டில் மூக்கில் ரத்தம் வழிந்து மயங்கி விட்டதாக அவரது அம்மா உஜ்வாலாவுக்கு தொலைபேசியில் தகவல் சென்றது. இதையடுத்து ரோகித் சேகரை விரைந்து வந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்
ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் மனைவியிடம் இது குறித்து கேட்ட போது ரோகித் சேகர் மாரடைப்பால் துடித்ததாகவும் பின்னர் மயங்கி விழுந்துவிட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் அவரின் வாக்குமூலத்தில் நம்பிக்கை ஏற்படாததால், ரோகித் சேகரின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
அங்கு நடைபெற்ற பிரேத பரிசோதனையின் முடிவில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ரோகித்தின் கழுத்து நெரிக்கப்பட்டு அதனால் தான் அவர் மூச்சுத்திணறி இறந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டது. இதனால் இந்த மரணம் இயற்கையானது அல்ல என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டதால், கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதில் ரோகித் சேகரின் மனைவி அபூர்வா மீது சந்தேகம் வலுத்தது.
சொத்துக்காக அவர் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டிருந்தனர். இந்நிலையில் தீவிர விசாரணைக்கு பிறகு ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில், அவரது மனைவி அபூர்வாவை போலீஸார் தற்போது கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications