தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி, ஆதரவுக்கு எதிரான நடவடிக்கை.. ஷாங்காய் மாநாட்டில் ராஜ்நாத்சிங்
டெல்லி: தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி மற்றும் ஆதரவுக்கு எதிரான நடவடிக்கை தேவை என ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பு மாநாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தினார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர, தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்பவர்களையும், நிதி உதவி வழங்குபவர்களையும் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்றார்.

மனித குலத்திற்கு எதிரான முக்கிய குற்றங்களை அறங்கேற்றும் தீவிரவாதமும், தேசத்தின் அமைதியும், செழுமையும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், ஒரு தேசம் தீவிரவாதிகளுக்கு புகலிடமாக இருக்கிறது என்றால் அது அந்த நாட்டிற்கு மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளுக்குமே விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும் என்றும் கூறினார். இளைஞர்களிடையே தீவிரவாதம் மேலோங்குவதை நாட்டின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக பார்க்காமல், சமூகத்தின் பொருளாதார முன்னேற்றப் பாதைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் கருத வேண்டும் என்றார். ஏனெனில் பாதுகாப்பான, நீடித்த மற்றும் செழுமையான பகுதிகளே ஒவ்வொரு தேசத்தின் மக்களுக்கும் அவர்களது வாழ்க்கையை தரமானதாக முன்னேற்ற, வழிவகுக்கும் என்று திரு ராஜ்நாத்சிங் தெரிவித்தார். செக்யூர் எனப்படும் பாதுகாப்பு என பொருள்படும் ஆங்கில வார்த்தை, நாட்டு மக்களின் பாதுகாப்பு, அனைவருக்குமான பெருளாதார முன்னேற்றம், மண்டலங்களுக்கிடையேயான இணைப்பு, மக்களை ஒருங்கிணைத்தல், ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் மரியாதை செலுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது என்பதே பிரதமர் திரு நரேந்தர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படை என்று கூறினார்.
உலகின் பல பகுதிகள் தற்போது உணவுப் பிரச்சனையை எதிர்கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டிய ராஜ்நாத்சிங், ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் உணவுப் பாதுகாப்பை ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பயிற்சிகள், ஒருங்கிணைந்த தயாரிப்பு ஆகியவற்றின் மூலம் ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்று காலம் மற்றும் நிலைகுலையச் செய்த நிலநடுக்கத்தின் போது, உலகை ஒரே குடும்பமாக பாவிக்கும் வசுதெய்வ குடும்பகம் என்ற உத்வேகத்தின் அடிப்படையில் இந்தியா மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொண்டதையும் ராஜ்நாத்சிங் நினைவுகூர்ந்தார்.
உறுப்பு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் ஷாங்காய் கூட்டமைப்பு முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு என்றும் திரு ராஜ்நாத்சிங் குறிப்பிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications