நீட் முதுநிலை தேர்வில் நெகட்டிவ் மார்க் எடுத்தாலும் சீட்.. கட் ஆப் மதிப்பெண்கள் அதிரடியாக குறைப்பு
டெல்லி: நீட் முதுநிலை தேர்வில் Cut-off மதிப்பெண் 0% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. Negative Marking முறை இருப்பதால், ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 800க்கு - 40 மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கான Cut-off மதிப்பெண் 50%-லிருந்து 7% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 800-க்கு 103 மதிப்பெண்கள் எடுத்தாலே போதும்.
இரண்டாம் கட்ட கலந்தாய்விற்குப் பிறகும் தனியார் கல்லூரிகளில் ஏராளமான இடங்கள் காலியாக இருப்பதால், மத்திய அரசு, கட் ஆஃப் மதிப்பெண்களை குறைத்துள்ளது.

எம்.டி, எம்.எஸ். மற்றும் முதுநிலை டிப்ளமோ போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் முதுநிலை தேர்வு (NEET-PG) கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியிடப்பட்டன.
இதனை தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கப்பட்டு, இதுவரை 2 சுற்று கலந்தாய்வுகள் நடந்து முடிந்துள்ளன. அதில், மொத்த மதிப்பெண்களான 800-ல் பொதுப்பிரிவினருக்கு 276 மதிப்பெண்களும், ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 235 மதிப்பெண்களும் கட் ஆஃப் ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தன.
ஆனால் 2 சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த பிறகும், நாடு முழுவதும் இன்னும் 18 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. ஏராளமான தனியார் கல்லூரிகளில் இடங்கள் காலியாக உள்ளன. இதனால், மத்திய அரசின் ஒப்புதலுடன் அடுத்த சுற்று கலந்தாய்வுக்கான கட் ஆப் மதிப்பெண்களை குறைத்து தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி பொதுப் பிரிவிற்கான நீட் முதுநிலை கட்ஆப் பர்சண்டைல் 50-ல் இருந்து 7 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, பொதுப்பிரிவினர் 800 மதிப்பெண்களுக்கு 103 மதிப்பெண்கள் எடுத்தால் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம். அதேபோல் ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான கட் ஆஃப் பர்சண்டைல் 40 ல் இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. நெகட்டிவ் மதிப்பெண் முறை இருப்பதால், 800க்கு -40 மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications