முதுநிலை நீட் தேர்வு.. அனைத்து பிரிவினருக்கும் கட் ஆப் மதிப்பெண் குறைப்பு!
டெல்லி: அனைத்து பிரிவினருக்கும் முதுநிலை நீட் தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண் குறைக்கப்படுவதாகத் தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வு மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. இளநிலை படிப்புகளுக்கும் முதுநிலை படிப்புகளுக்கும் தனித்தனியாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதுநிலை நீட் தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் கட் ஆஃப் மதிப்பெண் 15% குறைக்கப்படுவதாகத் தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்திடம் கலந்தாலோசித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தேசிய தேர்வு வாரியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், "பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, முதுநிலை நீட் தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் கட்-ஆஃப் 15 சதவிகிதம் குறைக்கப்படுகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சரின் ஒப்புதல் உடனே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பொதுப்பிரிவினருக்கு 35% ஆகவும், பொது மாற்றுத் திறனாளிகளுக்கு 30% ஆகவும், ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 25% ஆகவும் கட் - ஆஃப் குறைக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட கட் - ஆஃப் அடிப்படையில் புதிய தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட்டு, புதிய பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும்" எனக் கூறியுள்ளது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications