ஷாக்! ஆசையாக மோமோ சாப்பிட்ட இளைஞர்.. திடீரென அப்படியே சரிந்த உயிரிழந்த சோகம்.. விபரீதமான விளையாட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நண்பர்களுடன் இணைந்து ஜாலியாக மோமோ சாப்பிட்ட இளைஞன் ஒருவன் கொஞ்ச நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்த ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இப்போதெல்லாம் வெளியே சென்று சாப்பிடுவது என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்டது. முன்பெல்லாம் வெளியூர் சென்றிருந்தால் அல்லது வீட்டில் சமைக்கத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்றால் தான் வெளியே வாங்கி சாப்பிடுவார்கள்.

 Netizens Shocked as man dies in momo-eating challenge with friends

ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. வீட்டில் எல்லாம் இருந்தாலும் கூட வாரத்திற்கு சில நாட்களாவது வெளியே சென்று சாப்பிடுவதை இளைஞர்கள் வாடிக்கையாகவே கொண்டிருக்கிறார்கள்.

உணவுகள்: இப்படி அதிகப்படியானோர் வெளியே சென்று சாப்பிடுவதால் புதுப்புது உணவுகளும் வந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் கேள்விப்படாத உணவுகளும் கூட இப்போது பலரும் விரும்பி சாப்பிடும் உணவாக மாறிவிட்டது. அப்படி வந்த உணவுகளில் ஒன்று தான் மோமோ.. இந்த மோமோ என்பது வேகவைக்கப்படும் டம்பிளிங் வகை உணவாகும். கடந்த சில ஆண்டுகளாக நாம் இதை விரும்பி சாப்பிடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

முன்பு நட்சத்திர உணவகங்களில் மட்டும் இருந்த இந்த மோமோ இப்போது தெருவோர கடைகளில் வரை ஈஸியாக கிடைக்கிறது. இது இந்த மோமோக்களுக்கு எந்தளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இப்படிக் குறைந்த விலையிலும் மோமோக்கள் விற்கப்படும் நிலையில், சில கடைகளில் இது சுகாதாரமாகத் தயாரிக்கப்படுவதில்லை என்ற புகாரும் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

மோமோ: இதற்கிடையே பீகார் மாநிலத்தில் மோமோ சாப்பிட்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது. பீகாரின் கோபால்கஞ்சில் நண்பர்களுடன் சேர்ந்து இளைஞன் ஒருவர் ஜாலியாக உணவு கேம் விளையாடிய நிலையில், அதுவே அவரது உயிரைப் பறித்துள்ளது. "மோமோ சாப்பிடும் சேலஞ்சை விளையாடிய அந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த அந்த இளைஞன் 25 வயதான பிபின் குமார் பாஸ்வான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர் அளவுக்கு அதிகமாக மோமா சாப்பிட்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த பாஸ்வான் மொபைல் பழுது பார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்திருக்கிறார். கடந்த வியாழக்கிழமை வேலை நேரம் முடிந்தவுடன் இவர் வழக்கம் போல் தனது நண்பர்களைச் சந்தித்துள்ளார். அப்போது அவர்கள் மோமோ சாப்பிடும் போட்டியை விளையாட விட முடிவு செய்தனர். பாஸ்வானிடமும் அவரது நண்பர்கள் சவால் விட்டுள்ளனர்.

உயிரிழப்பு: இந்த சேலஞ்சில் பாஸ்வான் அதிகப்படியான மோமோக்களை குறைந்த நேரத்தில் சாப்பிட்டுள்ளார். இருப்பினும், அதன் பிறகு கொஞ்ச நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம் உயிரிழந்த அந்த நபரின் தந்தை தனது மகனுக்கு அவரது நண்பர்களை விஷம் வைத்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர், நண்பர்கள் தனது மகனை வேண்டுமென்றே மோமோ சாப்பிடும் சேலஞ்சிற்கு அழைத்துச் சென்று, அங்கே அவனை விஷம் வைத்துக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டுகிறார். இருப்பினும், முதற்கட்ட விசாரணையில் விஷத்திற்கான அறிகுறிகள் இல்லை என்றே போலீசார் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+