ஆனந்த் அம்பானி பேச பேச.. எமோஷனலாகி அடக்க முடியாமல் கண்ணீர் விட்ட முகேஷ் அம்பானி! என்னாச்சு
டெல்லி: குஜராத்தில் முகேஷ் அம்பானி வீட்டுத் திருமண கொண்டாட்டங்கள் நடந்து வரும் நிலையில், அதில் முகேஷ் அம்பானி கண்ணீர்விட்டு அழும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டுத் திருமண நிகழ்ச்சிகள் குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் ஜாம்நகர் வந்துள்ளனர்.

இதற்காக ஜாம்நகர் ஏர்போர்ட்டிற்கு தற்காலிகமாகச் சர்வதேச விமான நிலைய அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உலக பிரபலங்கள் பலரும் ஜாம்நகருக்கு வருகை தந்துள்ளனர்.
அம்பானி: இந்த திருமணத்திற்கு முந்தைய நிகழ்வில் ஆனந்த் அம்பானி பேசும் போது திடீரென எமோஷனலான முகேஷ் அம்பானி தன்னை மீறி கண்ணீர் விட்டார். அவர் எதற்காக இந்தளவுக்கு எமோஷ்னல் ஆனார். அப்படி ஆனந்த் அம்பானி என்ன பேசினார் என்பது குறித்து நாம் பார்க்கலாம். இந்த திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியின் போது தனது உடல்நலம் குறித்து ஆனந்த் அம்பானி வெளிப்படையாகப் பேசினார். அப்போது உடைந்து போன முகேஷ் கண்ணீர் விட்டு அழுதார்.
இந்த நிகழ்வில் பேசிய ஆனந்த் அம்பானி, முதலில் தனது பெற்றோருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், தனது குழந்தைப் பருவத்தில் எதிர்கொண்ட உடல்நல பிரச்சினைகள் குறித்தும் அவர் பேசினார். குறிப்பாக ஒரு கட்டத்தில் குழந்தையாக இருந்த போது தான் எதிர்கொண்ட சிரமங்கள் குறித்து அவர் பேசும் போது அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் முகேஷ் அம்பானி கண்ணீர் விட்டார்.
என்னது அம்பானி இல்ல திருமணத்திற்காக ஜாம்நகர் ஏர்போர்ட்டுக்கு சர்வதேச அந்தஸ்தா? அதிகாரிகள் விளக்கம்
ஆனந்த் அம்பானி பேச்சு: ஆனந்த் அம்பானி பேசும் போது, "எனக்காக எனது குடும்பம் பல விஷயங்களைச் செய்துள்ளார்கள். என் வாழ்க்கை முழுக்க ரோஜா பூக்களாக இருந்தது இல்லை. முட்களின் வலியை நானும் அனுபவித்திருக்கிறேன். சிறுவயதில் இருந்தே பல உடல்நலப் பிரச்சினைகளைச் சந்தித்திருக்கிறேன், ஆனால் என் அப்பாவும் அம்மாவும் ஒரு நாளும் என்னைக் கைவிட்டது இல்லை. நான் கஷ்டப்பட்டும் போதெல்லாம் அவர்கள் என்னுடன் இருந்தார்கள்" என்றார்.
எமோஷ்னல்: அவர் இப்படிப் பேசும் போது தான் முகேஷ் அம்பானி தன்னை மீறி கண்ணீர் விட்டார். அவர் எதற்காக இந்தளவுக்கு எமோஷ்னல் ஆனார். தனது மகனின் பேச்சை கேட்டு அவர் கண்ணீர் விடும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
திருமண நிகழ்வு: ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்ன்ட் ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய மூன்று நாள் கொண்டாட்டம் குஜராத் ஜாம்நகரில் களைகட்டியுள்ளது. இதில் அண்டை கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு விருது அளிக்கப்பட்டது. அவர்களுக்குக் குஜராத்தி பாரம்பரிய உணவுகளை அம்பானி குடும்பத்தினர் தங்கள் கைப்பட பரிமாறினர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் டிரெண்டானது.
மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் உலகின் டாப் பணக்காரர்கள் உட்பட 1,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாக பில் கேட்ஸ், மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அமிதாப் பச்சன், ஷாருக்கான், அமீர் கான், தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் என விருந்தினர் லிஸ்ட் பெரிதாகப் போகிறது. குறிப்பாகப் பிரபல பாப் நட்சத்திரம் ரிஹானா இந்தியாவில் முதல் முறையாக அம்பானி வீட்டுத் திருமணத்திற்காக பர்பொன்ஸ் நிகழ்த்துகிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications