டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

1980களில் மோடி இ- மெயில் அனுப்பினார்? டிஜிட்டல் கேமரா வெச்சிருந்தார்?.. ட்விட்டரில் ‘தெறி’சர்ச்சை

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரதமர் மோடி அளித்த பேட்டி ட்விட்டரில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது- வீடியோ

    டெல்லி: 1980களில் தாம் டிஜிட்டல் கேமரா மற்றும் டிஜிட்டல் பேட் வைத்திருந்ததாக பிரதமர் மோடி அளித்த பேட்டி ட்விட்டரில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

    மேகங்களுக்கு இடையே விமானங்கள் சென்றால் ரேடாரில் அது தெரியாது என பிரதமர் மோடி பகிரங்கமாக அளித்த பேட்டி பெரும் கேலிக்குரியதாகிவிட்டது. சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

    தற்போது நியூஸ் நேஷன் டிவிக்கு மோடி அளித்த பேட்டி மற்றொரு சர்ச்சையை கிளப்பியுள்ளது. நியூஸ் நேஷனுக்கு அளித்த பேட்டியில், 1990களின் தொடக்கத்திலேயே டிஜிட்டல் பேட் வைத்திருந்தேன். இப்போது அனைவரும் அதனை பயன்படுத்துகிறார்கள். அதேபோல் 80களிலேயே நான் டிஜிட்டல் கேமரா வைத்திருந்தேன். 1987 அல்லது 88-ல் அத்வானியை டிஜிட்டல் கேமராவில் படம் பிடித்து டெல்லிக்கு அந்த போட்டோவை அனுப்பினேன். அத்வானி தமது கலர் போட்டோவை பார்த்து ஆச்சரியப்பட்டார் என கூறியிருந்தார்.

    எழுந்தது சர்ச்சை.. காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஓட்டு போடவில்லை எழுந்தது சர்ச்சை.. காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஓட்டு போடவில்லை

    விமர்சிக்கப்படும் மோடி

    விமர்சிக்கப்படும் மோடி

    இந்தியாவில் டிஜிட்டல் கேமரா, டிஜிட்டல் பேட் என்பவை 1990களுக்குப் பின்னர்தான் அறிமுகமாகி 2000-ம் ஆண்டுகளில் அன்றாடப் பயன்பாட்டு பொருட்களில் ஒன்றானது. ஆனால் பிரதமர் மோடி 1980களிலேயே இவற்றை தாம் வைத்திருந்ததாக கூறியிருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது.

    ஏழை தாயின் மகனிடம் டிஜிட்டல் கேமரா?

    ஏழை தாயின் மகனிடம் டிஜிட்டல் கேமரா?

    மேலும் அதே போட்டியில் தாம் எம்.எல்.ஏ.வாகும் வரை தமக்கு வங்கிக் கணக்கே இல்லை.. எம்.எல்.ஏ. ஆனபோதுதான் கொஞ்சம் பணம் கிடைத்தது எனவும் மோடி கூறியுள்ளார். இதையும் சுட்டிக்காட்டி 1980களில் ஒரு சிலரிடமே இருந்த விலை உயர்ந்த டிஜிட்டல் கேமராவை கையில் பணமே இல்லாத மோடி எப்படி வைத்திருந்தார்? என கேள்வி எழுப்புகின்றனர்.

    இ மெயில் ஐடி என்ன?

    இ மெயில் ஐடி என்ன?

    இந்தியாவில் இ மெயில் அறிமுகம் செய்யப்பட்டதே 1995-ல்தான் என்கிற போது அதற்கு முன்னரே மோடி எப்படி டிஜிட்டல் பேட் வைத்திருந்தார் என கூறுகிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதில், மோடி இ மெயிலை முதன் முதலில் யாருக்கு அனுப்பினார் எனவும் மோடியின் இ மெயில் ஐடி டீ ஸ்டாலா? எனவும் கிண்டலடித்தும் உள்ளனர்.

    தேடுதல் வேட்டை தீவிரம்

    தேடுதல் வேட்டை தீவிரம்

    மோடியின் இந்த பேட்டியைத் தொடர்ந்து இப்போது கூகுள்தான் படாதபாடு படுகிறது. இந்தியாவுக்கு டிஜிட்டல் கேமரா எப்பொழுது அறிமுகமானது? இ மெயில் இந்தியாவுக்கு வந்ததது எப்பொழுது? என தேடித் தேடி ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

    English summary
    Netizens strongly criticised Prime Minsiter Narendra Modi for his interview, he said that he used digital pad and digital camera in 1980's.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X