Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொட்டு பாருங்க.. முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட எதிர்ப்பு! மத்திய அரசு பரிசீலனை இன்று திடீர் ரத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது கேரள அரசு... இதனால் தமிழக விவசாயிகள் கொந்தளித்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளதால், கேரள எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதனிடையே, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் கேரள அரசு அளித்துள்ள விண்ணப்பம் மீது, இன்று நடக்கவிருந்த பரிசீலனை திடீர் ரத்தாகியிருக்கிறது.

முல்லை பெரியாறு அணை கடந்த 128 ஆண்டுகள் பழமையானதாகும்.. அதனால்தான், தற்போது இது பலவீனமாக உள்ளது.. எனவே, புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு தொடர்ந்து சொல்லி வந்தது. இதற்காக அனுமதி கேட்டு கேரள அரசு, கடந்த ஜனவரியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் மனு அளித்தது.

New Dam in Mullai Periyar and Farmers Protest against kerala government for demolishing the Mullai Periyar Dam

அச்சுறுத்தல்: அதில் "முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டு 128 வருடங்கள் ஆகிவிட்டதால் அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் ஆயிரக் கணக்கான மக்கள், வன விலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, தற்போதுள்ள அணைக்கு 1,200 அடிக்குக் கீழே புதிய அணையை கட்டிய பிறகு, பழைய அணையை இடிக்க அனுமதி வேண்டும். புதிய அணை கட்டும்போதும், கட்டிமுடிக்கப்பட்ட பிறகும் தமிழகத்திற்கான தண்ணீர் பகிர்வு தற்போதைய ஏற்பாட்டின்படி தடையின்றி தொடர்ந்து செயல்படும்" என சொல்லப்பட்டது.

இதையடுத்து, முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக, அணையிலிருந்து வள்ளக்கடவு செல்லும் பாதையில் 366 மீட்டரில் புதிய அணைக்கான இடம் தேர்வு செய்தது மட்டுமல்லாமல், அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.

புதிய அணை: புதிய அணை கட்டுவதற்கான, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரள அரசு அளித்திருந்த விண்ணப்பமானது, இன்று அதாவது மே 28ம தேதி நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் பரிசீலனைக்காக பட்டியலிடப்பட்டது.. கேரளாவின் மனு குறித்து மத்திய ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு கூட்டத்தில் இன்று பரிசீலிக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியிருந்தது

ஆனால், இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.. கேரள அரசைக் கண்டித்து, அம்மாநிலத்திற்கு பொருட்களைக் கொண்டு செல்லும் சாலைகளில் மே 28ம் தேதி மறியல் போராட்டம் நடத்துவதென முல்லைப் பெரியாறு அணை மீட்புக் குழு அறிவித்துள்ளது.

பிஆர் பாண்டியன்: அதேபோல., புதிய அணை கட்டுவதற்கான விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரிக்க வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து இன்று காலை 11 மணிக்கு மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்திருக்கிறார்.

அதேபோல, முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள், நேற்றுகூட, தமிழக எல்லையான லோயர் கேம்பில் இருந்து முல்லை பெரியாறு அணை நோக்கி பேரணியாக கிளம்பி எதிர்ப்பை பதிவு செய்துவருகிறார்கள்.

இடுக்கி அணை: இடுக்கி அணையை இடிக்க கேரள அரசு தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தால், கடந்த 2011-ம் ஆண்டை போல மீண்டும் போராட்டம் தீவிரமடையும் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்..

அதுமட்டுமல்ல, அணையை இடித்தால் பால், காய்கறி, சிமெண்ட் என எந்த பொருளையும் கொண்டு செல்லவிடாமல் நாங்களே கேரளாவுக்கு பொருளாதார தடையை ஏற்படுத்துவோம் என்று ஆவேசமாக கூறி வருகிறார்கள். இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இதனிடையே, முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக இன்று நடைபெற இருந்த ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரள அரசின் விண்ணப்பம் இன்றைய கூட்டத்தில் பரிசீலிக்கப்படுவதாக இருந்த நிலையில் கூட்டம் ரத்தானதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+