உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழர் ஆர்.மகாதேவன் பதவியேற்பு-முழுமையானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் இன்று பதவியேற்றுக் கொண்டார். இதேபோல ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கோடீஸ்வர் சிங்கும் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக இன்று பதவியேற்றார். இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை முழுமையடைந்தது.
உச்சநீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 34. உச்சநீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் இடம் காலியாக இருந்தது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் குழுவானது, சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கோடீஸ்வர் சிங் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் பரிந்துரைத்தது.

உச்சநீதிமன்ற கொலிஜியம் குழுவின் இந்தப் பரிந்துரையில், ''The Collegium said Justice Mahadevan was ''eminently suitable'' for appointment as a Supreme Court Judge. He belongs to a backward community from Tamil Nadu, and will bring diversity to the Supreme Court Bench.'' என குறிப்பிட்டிருந்தது. அதாவது தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதற்காக சமூக நீதி அடிப்படையில் ஆர்.மகாதேவன், உச்சநீதிமன்ற நீதிபதியாக கொலிஜியம் குழுவால் பரிந்துரைக்கப்பட்டார். கொலிஜியம் குழுவின் இந்த பரிந்துரை தமிழ்நாட்டில் பெரும் பாராட்டைப் பெற்றது. தமிழ்நாட்டின் மூத்த எழுத்துலக ஆளுமை மா.அரங்கநாதனின் மகன் ஆர்.மகாதேவன்.
இதனையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், கோடீஸ்வர் சிங் ஆகியோரை நியமிக்கும் கொலிஜியம் குழுவின் பரிந்துரையை மத்திய அரசும் ஏற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
இதனடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், கோடீஸ்வர் சிங் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இருவருக்கும் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பதவியேற்பு செய்துவைத்தார். இரு நீதிபதிகள் பதவியேற்பைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கையான 34-ம் முழுமையடந்தது. உச்சநீதிமன்றத்தில் தற்போதைய நிலையில் நீதிபதிகள் பணியிடம் காலியாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications