இனி லீவ் எடுப்பதில் பிரச்சனை இல்லை.. சம்பளமும் போகாது.! மொத்தமாக மாறும் தொழிலாளர் சட்ட ரூல்ஸ்!
டெல்லி: தொழிலாளர்கள் சட்டம் தொடர்பாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பைச் சமீபத்தில் வெளியிட்டது. அதில் விடுப்பு, ஒவர் டைம், காப்பீடு தொடர்பாக சில முக்கிய பாயிண்டுகள் இருக்கிறது. இந்த புதிய விதிகள் ஏன் முக்கியம்.. இது எந்தளவுக்குத் தொழிலாளர்களுக்கு நன்மையைக் கொடுக்கும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை தொழிலாளர் சட்டம் தொடர்பாக மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் வேலை நிலைமைகள், வேலை நேரம், ஊதியத்துடன் கூடிய விடுப்புக்கான தகுதி மற்றும் சுகாதாரப் பலன்களில் பெரிய மாற்றங்கள் வர உள்ளன. இந்த மாற்றங்கள் அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். மேலும், இது பல லட்சம் தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லீவ் எடுப்பதில் சிக்கல் இல்லை
இதுவரை ஊழியர்கள் ஆண்டுக்கு 240 நாட்கள் வேலை செய்தால்.. அதன் பின்னரே ஊதியத்துடன் கூடிய விடுப்புக்குத் தகுதி பெறுவார்கள். ஆனால், புதிய சட்டங்களின் கீழ் 180 நாட்கள் வேலை செய்தாலே ஊதியத்துடன் கூடிய விடுப்புக்குத் தகுதி பெறுவார்கள். அதாவது தொழிலாளர்கள் விரைவாகச் சம்பளத்துடன் கூடிய விடுப்புக்குத் தகுதி பெறுவார்கள். உற்பத்தி, ஜவுளி, சில்லறை வர்த்தகம், கட்டுமானம் போன்ற துறைகளில் இது ஒரு முக்கிய மாற்றமாகும்.
இந்தக் குறைந்த கால வரம்பு மற்றும் புதிய வேலை நேர அமைப்பு ஆகியவை தொழிலாளர்கள் போதுமான ஓய்வையும், புத்துணர்ச்சியையும் பெறுவதை உறுதி செய்கிறது. இது நீண்ட கால நோக்கில் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் என்று அரசு சொல்கிறது.
வேலை நேரம்
தினசரி எட்டு மணி நேரம், வாரம் ஒன்றுக்கு அதிகபட்சம் 48 மணி நேரம் என்ற வழக்கமான உச்சவரம்பு அப்படியே இருக்கும். ஆனால், இந்த நேரங்களை எப்படி அமைப்பது என்பதில் மாற்றம் வருகிறது. வாராந்திர உச்சவரம்பை மீறாத வரை தினசரி வேலை நேரத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம்.
- அதாவது ஒரு தொழிலாளர் தினசரி 12 மணி நேரம் என வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை செய்யலாம்.
- அல்லது தினசரி 9.5 மணி நேரம் என வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை செய்யலாம்.
- அல்லது தினசரி 8 மணி நேரம் என வாரத்திற்கு 6 நாட்கள் வேலை செய்யலாம்.
ஓவர் டைம்
ஓவர் டைம் வேலை செய்யும்போது அதற்கு ஊழியர்களின் ஒப்புதல் தேவை. மேலும், வழக்கமான ஊதியத்தை விட இரண்டு மடங்கு அதிக சம்பவம் தரப்பட வேண்டும். முன்பு ஒரு காலாண்டுக்கு 75 மணி நேரம் மட்டுமே ஓவர்டைம் செய்ய வேண்டும் என்ற உச்சவரம்பு இருந்த நிலையில், இப்போது அந்த உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளே தேவை என்றால் இந்த உச்ச வரம்பை நிர்ணயம் செய்யலாம்.. இதனால் ஊழியர்கள் ஓவர்டைம் மூலம் அதிகம் சம்பாதிக்க முடியும்..
மருத்துவ காப்பீடு
மற்றொரு முக்கிய மாற்றம் மருத்துவக் காப்பீட்டில் வருகிறது. 40 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு ஊழியருக்கும் இனி ஆண்டுதோறும் இலவச மருத்துவப் பரிசோதனை வழங்கப்படும். குறிப்பாக அதிக நேரம் வேலை செய்யும் துறைகள், ஆபத்தான சூழல்களில் வேலை செய்ய வேண்டியவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
இது ஊழியர்களுக்கு மட்டுமின்றி.. தொழில்துறையினருக்கும் கூட பலன் தருவதாக இருக்கும்.. உடல்நலப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து, சரி செய்வதன் மூலம் நீண்ட கால மருத்துவச் செலவுகளைக் குறைக்க முடியும். மேலும், செயல்திறனையும் அதிகரிக்க முடியும்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications