டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய லோக்சபாவில் புதுமுக எம்.பி.க்கள்தான் அதிகமாம்.. சீனியர்கள் எண்ணிக்கை குறையுமாம்!

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் புதுமுகங்களுக்குத்தான் அதிக வாய்ப்பு கொடுத்திருக்கின்றன. இதனால் உருவாகும் புதிய லோக்சபாவில் சீனியர்களைவிட புதுமுக எம்.பி.க்கள்தான் அதிகம் இருக்கப் போகிறார்களாம்.

பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாத சத்தீஸ்கர், ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் கேரளாவில் ஏகப்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்ப்ட்டுள்ளது. சத்தீஸ்கரில் 91%; ஆந்திராவில் 83%; தெலுங்கானாவில் 82%; மேற்கு வங்க்கத்தில் 79%; பஞ்சாப்பில் 67%; கேரளாவில் 67% புதுமுக வேட்பாளர்கள்தான்.

ஆமாம் நான்தான் கொன்றேன்.. இல்லை.. எனக்கு சம்பந்தமில்லை.. குழப்பும் ரோஹித் திவாரி மனைவி அபூர்வா! ஆமாம் நான்தான் கொன்றேன்.. இல்லை.. எனக்கு சம்பந்தமில்லை.. குழப்பும் ரோஹித் திவாரி மனைவி அபூர்வா!

காங். புதுமுகங்கள்

காங். புதுமுகங்கள்

அதேநேரத்தில் ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் சீனியர்களை அதிகமாக களமிறக்கியுள்ளது பாஜக. அதேபோல காங்கிரஸ் கட்சியும் ஆந்திரா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், குஜராத், ஒடிஷா,, மத்திய பிரதேசம், அஸ்ஸாம், டெல்லி, ராஜஸ்தானில் அதிக அளவு புதுமுகங்களை களமிறக்கியுள்ளது.

சீனியர்களுக்கு முக்கியத்துவம்

சீனியர்களுக்கு முக்கியத்துவம்

ஆந்திரா-92%; சத்தீஸ்கர் 91%; மேற்கு வங்கம் 78%; குஜராத் 77%; ஒடிஷா 72%; மத்திய பிரதேசம்-69%; அஸ்ஸாம் 57%; டெல்லி 57%; ராஜஸ்தான் 56% என்கிற அளவில் புதுமுகங்களை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. ஜார்க்கண்ட், கர்நாடகா, உத்தரகாண்ட் மற்றும் ஹரியானால் சீனியர்களை அதிக எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர்களாக்கியுள்ளது.

கட்சி தாவியோருக்கு சீட்

கட்சி தாவியோருக்கு சீட்

மேலும் கட்சி விட்டு கட்சி தாவியர்களுக்கு பாஜகவும் காங்கிரஸும் முக்கியத்துவம் கொடுத்து வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. இப்படி கட்சி மாறியவர்களில் காங்கிரஸ் 36 பேருக்கும் பாஜக 21 பேருக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளது.

சீனியர்கள் குறைவு

சீனியர்கள் குறைவு

இப்படி புதுமுகங்களுக்கு இரு கட்சிகளுமே முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் புதிய லோக்சபாவில் இளம் எம்.பி.க்கள் நிறைந்து காணப்படுவர். அனுபவம் மிக்க மூத்தவர்கள் இம்முறை மிகவும் குறைவாகத்தான் இருப்பார்கள் என்கின்றன புள்ளி விவரங்கள்.

English summary
New Loksabha may be mix of small number of experienced politicians and large number of newcomers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X