Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒடிபி கூட கேட்கவில்லையாம்..புது யுக்தியில் வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ் செய்யும் கும்பல்..உஷார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆதார் எண் அப்டேட் செய்கிறோம் ஓடிபி கொடுங்கள் என தொலைபேசியில் அழைத்து பணத்தை திருடும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வந்த நிலையில், தற்போது ஒடிபி எண்ணே இல்லாமல் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திருடப்பட்ட சம்பவம் வங்கி பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

தற்போதைய நவீன யுகத்தில் பணப்பரிமாற்றங்கள் அதிக அளவில் டிஜிட்டல் முறையிலேயே நடக்கிறது. பணத்தை ரொக்கமாக கொண்டு செல்வதை விட இதுபோன்ற வங்கிக் கணக்குகளில் இருந்து நேரடியாக பரிமாற்றம் செய்வது பாதுகாப்பானதாக இருக்கும் என்று ஆரம்பத்தில் நம்பப்பட்டது.

ஆனால், தற்போது அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை பார்க்கும் போது கொஞ்சம் அசந்தால் கூட நமது வங்கிக் கணக்கில் இருந்து நமக்கே தெரியாமல் பணத்தை திருடி விடுகின்றனர்.

ஓடிபி இல்லாமலே பணம் அபேஸ்

ஓடிபி இல்லாமலே பணம் அபேஸ்

அதிலும் ஆதார் எண் அப்டேட் செய்கிறோம் ஓடிபி கொடுங்கள் என தொலைபேசியில் அழைத்து பணத்தை திருடும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்தன. இதனால் வங்கிகளும் ஒடிபியை யாருக்கும் பகிர வேண்டாம் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், தற்போது ஒடிபி எண்ணே இல்லாமல் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திருடப்பட்ட சம்பவம் வங்கி பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

அதிர்ச்சிகர தகவல்

அதிர்ச்சிகர தகவல்

குஜராத் மாநிலம் வதோராவில் வாடிக்கையாளர்கள் பலரும் இதுபோல தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் தங்களுக்கே தெரியாமல் திருடு போய் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்த விவரம் வருமாறு:-

அவர்களுக்கே தெரியாமல்

அவர்களுக்கே தெரியாமல்

பணம் திருடு போனதாக கூறியவர்களின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்த போது அவர்களுக்கே தெரியாமல் Add beneficiary-யில் மோசடி கும்பல் அவர்களின் வங்கிக் கணக்கை வைத்து இருக்கின்றனர். பின்னர் வங்கிக்கணக்கில் இருந்து அவர்களுக்கே தெரியாமல் பணத்தை மோசடியாளர்கள் தங்கள் கணக்கிற்கு மாற்றிவிடுகின்றனர். ஆனால், Add Benificiary- யில் ஒருவரை புதிதாக இணைக்கவும் பணத்தை பரிமாற்றம் செய்யவும் ஓடிபி அவசியம்.

யாருக்கும் ஓடிபி வரவில்லை

யாருக்கும் ஓடிபி வரவில்லை

யுபிஐ மூலமாக செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே ஓடிபி கேட்கப்படுவதிலை. எனவே Add Benificiary- யில் பணத்தை பரிமாற்றம் செய்த போதும் யாருக்கும் ஓடிபி வரவில்லை. பிறகு எப்படி பணத்தை திருடியிருக்க முடியும் என பெரும் குழப்பத்திற்கு போலீசாரே ஆளாகியிருக்கின்றனர். இதையடுத்து, போலீசாரும் வங்கிகளிடம் ஏதேனும் பாதுகாப்பு குளறுபடி நடந்துள்ளதா? என கேட்டு இருக்கின்றனர்.

கூடுதல் விழிப்புடன் இருக்க

கூடுதல் விழிப்புடன் இருக்க

இது தொடர்பான விசரணை ஒருபக்கம் நீடித்துக் கொண்டே இருக்கிறது. எனினும், ஓடிபி இல்லாமலே பணத்தை திருடியிருப்பது பெரும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. இப்படி போலீசாரையே குழம்ப வைக்கும் அளவுக்கு நூதன முறையில் கைவரிசை காட்டியிருக்கும் புதிய சைபர் மோசடியில் இருந்து தப்பிக்க வாடிக்கையாளர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்கிறார்கள் சைபர் கிரம் அதிகாரிகள். இது தொடர்பாக சைபர் கிரைம் அதிகாரிகள் கூறுகையில்,

என்ன செய்ய வேண்டும்

என்ன செய்ய வேண்டும்

* ஆன்லைன் வங்கி கணக்கில் பயனாளர்கள் விபரத்தை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.
* தெரியாத யாராவது பயனளாராக இருந்தால் உடனடியாக அதை நீக்க வேண்டும்.
* அதேபோல் நீண்ட நாட்களாக பரிவர்த்தனை செய்யாத பயனாளர்களை நீக்க வேண்டும்.
* பொது கம்யூட்டர்களில் ஆன்லைன் வங்கி கணக்குகளை பயன்படுத்துவதை முடிந்த வரை தவிர்க்கலாம்.
* பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பொது இடங்களில் கிடைக்கும் வைஃபை வசதியை பயன்படுத்த வேண்டாம்.
* உங்களுடைய பாஸ்வேர்டுகளை 14 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+