55 பாலம், 48 சுரங்கப்பாதை.. மிசோரமில் 8000 கோடியில் பிரம்மாண்டம்.. 1.30 மணி நேரமான 10 மணி நேர பயணம்
டெல்லி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடைசி எல்லையில் உள்ள மிசோரம் மாநிலம் 91 சதவீதம் காடுகளை கொண்ட மாநிலம் ஆகும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகருக்கு அடுத்தபடியாக மிசோராம் மாநிலத்திற்கு ரயில் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. ரூ.8,071 கோடியில் 55 உயரமான பாலங்கள், 48 சுரங்கப்பாதைகளுடன் சவால் நிறைந்த புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை சாலை வழியாக கடக்க 7 முதல் 10 மணி நேரம் ஆகிவந்தது. இனி வெறும் ஒன்றரை மணி நேரத்தில் போக முடியும். இதில் தமிழ் என்ஜினியர்களின் பணி அளப்பரியது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா உலகின் வித்தியாசமான பல கலாசாரத்தை பண்பாட்டை கொண்ட மாநிலம் மட்டுமல்ல.. நிலப்பரப்பிலும் மிகவும் வித்தியாசமான பல்வேறு பகுதிகளை கொண்டது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் இமயமலையில் இருக்கின்றன. இமயமலை என்பது காஷ்மீர் தொடங்கி கீழே மிசோரம் , அருணாச்சல பிரதேசம் வரை நீள்கிறது. இதில் வடகிழக்கு மாநிலங்களில் பெரிய அளவில் ரயில் போக்குவரத்து இன்று வரை கிடையாது. குறிப்பாக மலைப்பகுதிகளை கொண்ட மாநிலங்களுக்கு ரயில் பாதைகள் எட்டாத கனவாக இருந்து வந்தன.

சில்சார் டூ பைராபி
அந்த வகையில் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன போதும் மிசோரம் தலைநகர் ஐஸ்வால் ரயில் போக்குவரத்துடன் இணைக்கப்படாமல் இருந்து வந்தது. மிசோரமின் ஒரு பகுதியான பைராபி வரை மட்டுமே ரயில் போக்குவரத்து இருந்து வந்தது. அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து பைராபி வரையிலான இவ்வழித்தடம் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம்தான் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டிருந்தது.
ஜஸ்வாலை இணைக்க பாதை
இவ்வழித்தடத்தின் ரயில் பாதை சுமார் 103 கிலோமீட்டர் தூரம் ஆகும். ஆனால் பெரும்பாலும் அசாம் மாநில எல்லைக்குள்தான் இவ்வழித்தடம் இருக்கிறது. வெறும் 5 கிலோமீட்டர் தூரத்துக்குத்தான் மிசோரம் மாநிலத்தில் ரயில் பாதை இருந்தது. இந்நிலையில் மிசோரம் மாநிலத்தின் பைராபி முதல் சாய்ராங் இடையே 51.38 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைத்து மிசோரம் மாநிலத்தின் தலைநகரான ஐஸ்வாலை இணைத்து ரெயில் போக்குவரத்து பட்டியலில் அதனை கொண்டுவர கடந்த 1999-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு திட்டமிட்டது. சாய்ராங், மிசோரமின் தலைநகரான ஐஸ்வாலுக்கு மிக அருகில் இருந்த இடம் ஆகும். ஆனால் இந்த திட்டம் கடும் சவால்கள் மற்றும் செலவுகள் காரணமாக செயல்படுத்தப்படாமலேயே கைவிடப்பட்டது.
மோடி எடுத்த முடிவு
பின்னர், 2014-ம் ஆண்டு பிரதமராக மோடி பொறுப்பேற்றவுடன், அதே ஆண்டு நவம்பர் 29-ந்தேதி இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தை அமைப்பதற்கு நடைமுறையில் உள்ள சிக்கல்கள், மலைப்பாதையில் உள்ள பிரச்சினைகளை கடந்து ரயில்பாதை அமைக்க ரயில்வே திட்டமிட்டது.
48 சுரங்கப்பாதைகள்
அதன்படி நிலம் கையகப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடந்தது. அதன்பின்னர் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்தன. இத்திட்டத்துக்கான 51.38 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையில், 5 ரயில் நிலையங்கள், 12.48 கிலோ மீட்டர் நீளமுள்ள மலைகளை குடைந்து 48 சுரங்கப்பாதைகள், 55 உயரமான பாலங்கள், 87 சிறிய பாலங்கள், 5 சாலை மேம்பாலங்கள் உருவாக்கப்பட்டன. இதில் ஒரு பாலம் 114 மீட்டர் உயரம் உடையது ஆகும்.
8000 கோடியில் ரெடி
அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், பைராபி-சாய்ராங் ரயில் பாதை தற்போது ரயில் போக்குவரத்துக்கு ரெடியாகிவிட்டது. இத்திட்டத்தின் மூலம் சாய்ராங் ரயில்நிலையம் அற்புதமாக மாறி உள்ளது. ராஜதானி ரயில் சேவைகள் இயக்கப்படும் வகையில் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக ரூ.8,071 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ரயில்பாதை ஐஸ்வாலை அசாமின் சில்சார் நகரத்துடனும், நாட்டின் பிற பகுதிகளையும் இணைத்துள்ளது.
வெறும் ஒன்றரை மணி நேரம்
தற்போது மிசோரம் மாநிலத்தின் பைராபியில் இருந்து சாய்ராங் வரை சாலை வழியாக செல்ல 7 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை ஆகி வருகிறது. கடுமையான மலைப்பகுதி என்பதால்,, பருவ நிலையை பொறுத்து நேரம் மாறுபட்டு வந்தது. ஆனால் தற்போது பயன்பாட்டுக்கு வர இருக்கும் புதிய ரெயில் பாதை மூலம் பைராபி ரெயில் நிலையத்தில் இருந்து சாய்ராங் ரெயில் நிலையத்துக்கு ஒன்றரை மணி நேரத்தில் சென்றுவிட முடியும்.
தமிழ் என்ஜினியர்கள்
இந்த புதிய ரயில் பாதை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 2-வது அல்லது 3-வது வாரத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. மிசோரம் புதிய ரயில் பாதை திட்ட பணியை 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது . இந்த நிறுவனங்களின் சார்பில் தமிழகத்தை சேர்ந்த தொழில்நுட்ப என்ஜினியர்கள் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள்.. இந்த புதிய ரயில் பாதை திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்ததில் தமிழக என்ஜினியர்களுக்கு பெரும் பங்கு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எப்படி நடந்தது
ஆண்டுக்கு 4 மாதங்கள் மட்டுமே பணிகள் நடந்து வந்த நிலையில், கட்டுமான பணிகளுக்கான பொருட்கள் அசாமில் இருந்துதான் கொண்டுவர வேண்டி இருந்தது. ஒவ்வொரு இடங்களிலும் நடைபெற்ற பணியின்போது சுமார் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டார்களாம்.. மலைகளுக்கிடையே ரயில் பாதை அமைக்கப்படுவதால், அதற்கான ஆயத்த பணிகளுக்கு சுமார் 200 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டிருக்கிறதாம்.ஒரே நேரத்தில் ரயில் பாதையும், சாலையும் அமைக்கப்பட்டுள்ளதால், மிசோரம் மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications