கள்ளக்காதலனுக்காக.. விஷ பாம்பை ஏவி மாமியாரை கொன்ற மருமகள்.. ஜாமீன் தர மறுத்த சுப்ரீம் கோர்ட்
பாம்பை ஏவி மாமியாரை கொன்ற மருமகளுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது
டெல்லி: கள்ளக்காதலை கண்டித்ததால், பாம்பை ஏவி விட்டு மாமியாரை கொன்ற மருமகளுக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2019-ல் நடந்த சம்பவம் இது.. பத்திரிகைகளில் அப்போது பரபரப்பாக பேசப்பட்ட வழக்கும்கூட.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த அல்பனா.. இவர் தன்னுடைய மாமியார் சுபோத் தேவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.. மாமனார் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்.

மாமியார்
அல்பனாவின் கணவரும், கணவரின் தம்பியும் ராணுவத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.. அதனால் அவர்களும் பெரும்பாலும் சொந்த ஊருக்கு வருவதில்லை.. இதனால் மாமியாரும் - மருமகளும் மட்டும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், அல்பனாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணீஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுளள்து. அதனால் இருவரும் செல்போனில் பேசி வந்தனர்.

விஷ பாம்பு
இந்த விஷயம் மாமியாருக்கு தெரிந்து மருமகளை கண்டித்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த மருமகள், மாமியாரை கொல்ல முடிவெடுத்தார்.. அதற்காக விஷம் அதிகமுள்ள பாம்பை வாங்கி வந்து 2019 ஜுன் 2ம் தேதி அவர் மீது ஏவி கொன்றுவிட்டனர். இந்த மரணம், மாமனாருக்கு சந்தேகத்தை கிளப்பியது.. அப்போதுதான் மருமகளின் கள்ளக்காதல் விவகாரமும் தெரியவந்துள்ளது.. எனவே, சில சாட்சிகளை தயார் செய்து கொண்டு போலீசில் புகார் தந்தார்..

மணீஷ்
மேலும் கள்ளக்காதலர்கள் 2 பேரின் செல்போன் நம்பரையும் போலீசில் தந்தார்... போலீசாரும் அதன்பேரில் விசாரணையை ஆரம்பித்தனர்.. சம்பவம் நடந்த அன்று மட்டும், அல்பனா 124 முறை மணீஷை தொடர்பு கொண்டுள்ளார்... அதேபோல மணீஷூம், 19 முறை அல்பனா, மற்றும் கிருஷ்ணகுமார் என்பவரிடமும் பேசியுள்ளார்.. கிருஷ்ணகுமார் என்பவர்தான் 10 ஆயிரம் ரூபாய்க்கு பாம்பை வாங்கி வந்தாராம்.

விசாரணை
இதையடுத்து, இந்த சம்பவத்தில் அல்பனா, மணீஷ், கிருஷ்ண குமார் 3 பேரும் 2020 ஜனவரி மாதம் கைதாகி சிறையில் உள்ளனர்.. இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வேண்டும் என்று கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் கேட்கப்பட்டுள்ளது.. அது தொடர்பான வழக்குதான் சுப்ரீம்கோர்ட்டில் தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

பாம்பாட்டி
விசாரணையின்போது, நீதிபதி சூர்யகாந்த் சொல்லும்போது, "இப்போதெல்லாம் விஷ பாம்புகளை பாம்பாட்டிகளிடமிருந்து வாங்கி, அதை ஏவிவிட்டு கொல்லுவது அதிகமாகிவிட்டது.. அதுவும் ராஜஸ்தானில் அதிகமாகிவிட்டது.. கிருஷ்ண குமார்தான், பாம்பாட்டியிடம் சென்று ரூ.10 ஆயிரம் கொடுத்து விஷமுள்ள பாம்பை வாங்கி வந்துள்ளார்" என்றார்.. இதற்கு எதிர்தரப்பில் வழக்கறிஞர் வாதாடும்போது:

தள்ளுபடி
"இந்த வழக்கில் கிருஷ்ணகுமார் என்பவருக்கு நேரடியாக தொடர்பில்லை.. இவர் அந்த பெண்ணின் நண்பர்தான்.. அதற்காக விஷப்பாம்பு மற்றும் சொந்த பிரச்சனையெல்லாம் அவருக்கு தெரிய வாய்ப்பில்லை.. பாம்பு வாங்குவதை மருத்துவ காரணத்துக்காக வாங்குகிறார் என்றுதான் அவர் நினைத்துள்ளார்.. அதுமட்டுமல்லாமல் அவர் பொறியியல் மாணவர்... அதை கருதியாவது ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கேட்டு கொண்டார்.. இறுதியில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, அவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார












Click it and Unblock the Notifications