டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புத்தாண்டை எந்த நாடு முதலில் வரவேற்கும்.. யார் கடைசி! இதில் இருக்கும் சுவாரசியம் தெரியுமா

Google Oneindia Tamil News

டெல்லி: இன்று இரவு அனைவரும் 2023ஐ வரவேற்க உள்ளோம்.. ஆனால், இந்த 2023ஐ அனைவரும் ஒன்றாக வரவேற்க மாட்டோம் என்பது அனைவருக்கும் தெரியும்.. எந்த நாடு முதலில் புத்தாண்டை வரவேற்க உள்ளது.. எது கடைசியாக வரவேற்கும் என்பதை பார்க்கலாம்.

இன்று 2022இன் கடைசி நாள்.. இந்த ஆண்டு உள்ளூர் தொடங்கி சர்வதேசம் வரை பல நிகழ்வுகள் முக்கியமானதாக இருந்தது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடங்கி உக்ரைன் போர் வரை இந்தாண்டு முழுக்க பரபரப்பாகவே சென்றது.

இப்போது இந்தாண்டு கடைசி நாளுக்கு வந்துவிட்டோம். இன்று இரவு 12 மணிக்கு அனைவரும் 2023ஐ வரவேற்க உள்ளோம். 2023ஐ வரவேற்க அனைவரும் கோலாகலமாக ரெடியாகி வருகின்றனர். கொரோனா குறைந்துள்ள நிலையில், கொண்டாட்டங்களும் களைகட்டியுள்ளது.

புத்தாண்டு

புத்தாண்டு

ஆனால், இந்த 2023ஐ அனைவரும் ஒன்றாக வரவேற்க மாட்டோம் என்பது அனைவருக்கும் தெரியும்.. அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நேரத்தைப் பின்பற்றுவதால், புத்தாண்டு கொண்டாட்டங்களும் வேறுபடும். பூமியில் ஒவ்வொரு நாளும் தோராயமாக 24 மணி நேரம் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது அதை விடச் சற்று கூடுதலாகவே இருக்கும்.

நேரம்

நேரம்

இதற்கு international date lineதான் காரணம். எந்த நாடு முதலிலும் எது கடைசியிலும் புத்தாண்டைக் கொண்டாட உள்ளது என்பதைப் பார்க்கும் முன்பு சின்ன ஹிஸ்டரி. 1880களில் சர்வதேச பயணங்கள் அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நேர முறை இருந்ததால், தொடர்ந்து பயணம் செய்பவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் எளிதாக நேரத்தைக் கண்டறிய international date line முறை கொண்டு வரப்பட்டது.

 முதல் நாடு எது

முதல் நாடு எது

இது பசிபிக் பெருங்கடலின் நடுவில் வடக்கிலிருந்து தெற்கே 180வது மெரிடியனைப் பின்தொடர்கிறது. அதாவது பிரிட்டன் நாட்டின் கிரீன்விச் என்ற பகுதியை மையமாக வைத்து உலகம் முழுவதும் நேரம் கணிக்கப்படுகிறது. முதலில் பசிபிக் பகுதியில் அமைந்துள்ள தீவுகள் தான் புத்தாண்டை முதலில் கொண்டாட உள்ளன. கிரிமதி தீவு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள 10 மக்கள் வசிக்காத தீவுகளில் தான் புத்தாண்டு முதலில் வரும்.

 அடுத்தடுத்த நாடுகள்

அடுத்தடுத்த நாடுகள்

அதாவது கிரிபட்டி என்ற நாடு மொத்தம் 33 தீவுகளை உள்ளடக்கியது. அந்த நாட்டில் உள்ள கிரிமதி தீவு தான் முதலில் புத்தாண்டைக் கொண்டாட உள்ளது. அதன் பிறகு டோங்கா, உள்ளிட்ட தீவுகளில் புத்தாண்டு வரும். இங்கு இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கே புத்தாண்டு தொடங்கிவிடும். அதைத் தொடர்ந்து ஓசியானியா நாடுகளில் புத்தாண்டுகள் வரும். அப்படியே மெல்ல ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் புத்தாண்டுகள் வரும்.

 கடைசி பகுதி

கடைசி பகுதி

அதன் பிறகு அமெரிக்காவில் புத்தாண்டு வரும். புத்தாண்டை கடைசியாக வரவேற்கும் பகுதி என்று பார்த்தால் அது தென் பசிபிக் பகுதியில் உள்ள நியு மற்றும் அமெரிக்கன் சமோவா தீவுகள் ஆகும். இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தான் புத்தாண்டை கடைசியாக வரவேற்பார்கள். இதற்குப் பிறகு இருக்கும் பேக்கர் தீவு மற்றும் ஹவ்லேண்ட் தீவில் இதன் பிறகு தான் புத்தாண்டு வரும் என்றாலும் கூட இந்த இரண்டிலும் மக்கள் யாரும் இல்லை.

 மொத்தம் 25 மணி நேரம்

மொத்தம் 25 மணி நேரம்

அதாவது இந்திய நேரப்படி ஜனவரி 1ஆம் தேதி மாலை 4.30 மணிக்குத் தான் இங்குப் புத்தாண்டு வரும். மொத்தத்தில் பார்த்தால் பூமியில் வசிக்கும் அனைத்து இடங்களும் ஒரு நாளைக் கடக்க 25 மணி நேரம் ஆகும். எனவே, இந்த புத்தாண்டு இன்று மாலை தொடங்கி 25 மணி நேரம் உலகெங்கும் கொண்டாடப்பட உள்ளது. இது சற்றே குழப்பும் வகையில் இருந்தாலும் கூட இப்படித்தான் புவியியல் ரீதியாக இத்தனை ஆண்டுகள் நாம் புத்தாண்டைக் கொண்டாடி வந்துள்ளோம்.

English summary
Nations which will welcome new year first and last: Totally 25 hours will take to complete new year 2023.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X