27 ராஜ்ய சபா எம்.பிக்கள் பதவியேற்பு.. தமிழகத்தில் இருந்து ஒருவர்.. சி.வி.சண்முகம் இன்று மிஸ்ஸிங்!
டெல்லி : சமீபத்தில் மாநிலங்களவை எம்.பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினர்களில் 27 பேர், இன்று அரசியலமைப்பு சாசனப்படி முறையாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
27 மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநிலங்களவைத் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக எம்.பி ஆர்.தர்மர் இன்று பதவியேற்றுக் கொண்டார். சி.வி.சண்முகம் இன்று பதவியேற்கவில்லை.

ராஜ்யசபா தேர்தல்
மாநிலங்களவையில் காலியாக உள்ள 57 எம்.பி பதவிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்தது. அதில், 11 மாநிலங்களில் 41 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள 16 இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதன்படி 16 பேர் எம்.பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பதவியேற்பு
மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 57 எம்.பிக்களில், இன்று 10 மாநிலங்களைச் சேர்ந்த 27 பேர் அரசியலமைப்பு சாசனப்படி முறையாகப் பதவியேற்றனர். அவர்கள் அனைவரும் மாநிலங்களவைத் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் முரளீதரன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிர்மலா சீதாராமன்
மாநிலங்களவை எம்.பி.யாக இன்று பதவியேற்ற 27 பேரில் 18 பேர் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள். மத்திய அமைச்சர்களாக பொறுப்பு வகித்து வரும் நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் இன்று ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றுக்கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், விவேக் கே தன்கா, முகுல் வாஸ்னிக் ஆகியோரும் இன்று பதவியேற்றனர்.

தமிழில் ஒருவர்
10 மாநிலங்களைச் சேர்ந்த இந்த 27 உறுப்பினர்கள் வெவ்வேறு மொழிகளில் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். 12 எம்பிக்கள் இந்தியிலும், 4 பேர் ஆங்கிலத்திலும், சமஸ்கிருதம், கன்னடம், மராத்தி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் தலா இருவரும், பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தலா ஒருவரும் பதவியேற்றனர்.

சி.வி.சண்முகம் பதவியேற்கவில்லை
= அதிமுகவைச் சேர்ந்த ஆர்.தர்மர் இன்று ராஜ்யசபா எம்.பியாக தமிழில் பதவியேற்றுக் கொண்டார். அதிமுக சார்பில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.வி.சண்முகம் இன்று பதவியேற்கவில்லை. திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 எம்.பிக்கள் இன்று பதவியேற்றுக் கொள்ளவில்லை. இன்று பதவியேற்காத எஞ்சிய எம்.பி.க்கள், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications