உ.பி, உத்தரகாண்ட், மணிப்பூர், கோவாவில் மீண்டும் பாஜக ஆட்சி- காங்.க்கு செம அடியாம்- கருத்து கணிப்பு
டெல்லி: உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜகவே ஆட்சியைத் தக்க வைக்கும் என்கின்றன ஏபிபி-சிவோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள். மேலும் பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை இழக்கும்; ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்; அம்மாநிலத்தில் தொங்கு சட்டசபைக்குதான் வாய்ப்பு என்கிறது சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தாது, விவசாயிகள் படுகொலை உள்ளிட்டவைகளால் பாஜக அரசு மீது அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது.

உ.பி, கருத்து கணிப்பு
இந்த அதிருப்தியை அறுவடை செய்ய வலிமையான கூட்டணி என எதுவும் உ.பி.யில் இல்லை. சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் என அத்தனை கட்சிகளும் தனித்தனியே ஆவர்த்தனம் வாசிக்கின்றன. இதனால் பாஜகவை அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாது என்கிறது களநிலவரம். இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது ஏபிபி-சிவோட்டர் கருத்து கணிப்பு. உ.பி.யில் 2017 சட்டசபை தேர்தலில் பாஜக 41.4% வாக்குகளைப் பெற்றது. தற்போதும் பாஜகவுக்கு 41.3% வாக்குகள் கிடைக்கும் என்கிறது ஏபிபி-சிவோட்டர் கருத்து கணிப்பு. அதாவது பாஜகவுக்கு 241 முதல் 249 இடங்கள் வரை கிடைக்குமாம். சமாஜ்வாதி கட்சிக்கு 130 முதல் 138 இடங்களும் (32%) கிடைக்க வாய்ப்பு உள்ளதாம். ஏற்கனவே செல்வாக்கை இழந்து விட்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 15 முதல் 19 இடங்களும் (15%) காங்கிரஸுக்கு வெறும் 3 முதல் 7 இடங்களும்தான் (6%) கிடைக்கும் என்கிறது இந்த கருத்து கணிப்பு முடிவுகள். உத்தரப்பிரதேசத்தை ஒரு காலத்தில் கோட்டையாக கட்டி ஆண்ட காங்கிரஸ் கட்சி சிங்கிள் டிஜிட் நிலைக்கு தள்ளப்படும் வகையில் மரண அடி வாங்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு முடிவுகள்.

பஞ்சாப்பில் தொங்கு சட்டசபை?
பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. ஆனால் பஞ்சாப் காங்கிரஸில் உட்கட்சி மோதல் உக்கிரமாகவும் இருக்கிறது. அண்மையில்தான் முதல்வர் அமரீந்தர்சிங் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அத்துடன் காங்கிரஸுக்கு குட்பையும் சொல்லிவிட்டார் அமரீந்தர்சிங். மேலும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து சித்து திடீரென ராஜினாமா செய்தார். அவர் இன்னமும் தனது முடிவை திரும்பப் பெறவில்லை. இப்படியான அக்கப்போர்களால் அடுத்த ஆண்டு நடைபெறும் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவைத்தான் சந்திக்கும் என்றே கூறப்படுகிறது. ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்புகளும் பஞ்சாப் மாநிலத்தில் தொங்கு சட்டசபை ஏற்படத்தான் வாய்ப்புள்ளது என்கிறது. 117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபை. இதில் ஆம் ஆத்மி கட்சி 49 முதல் 55 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்கிறது இந்த கருத்து கணிப்பு முடிவுகள். அதாவது ஆம் ஆத்மி கட்சிக்கு 36% வாக்குகள் கிடைக்குமாம். காங்கிரஸ் கட்சிக்கு 30 முதல் 47 இடங்கள் (32%), அகாலி தளத்துக்கு 17 முதல் 25 இடங்கள் (22%), பாஜகவுக்கு அதிகபட்சம் 1 இடம் (4%) கிடைக்கும் என்கிறது ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள்.

உத்தரகாண்ட், கோவாவில் பாஜக
உத்தரகாண்ட் மாநிலத்திலும் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்கிறது ஏபிபி சி வோட்டர் சர்வே. உத்தரகாண்ட் தேர்தலில் பாஜகவுக்கு 42 முதல் 46 இடங்கள் (45% வாக்குகள்) கிடைக்குமாம். காங்கிரஸுக்கு 21 முதல் 25 இடங்கள் (34%), ஆம் ஆத்மிக்கு 0-4 இடங்கள் (15%) கிடைக்கும் என கணித்திருக்கிறது ஏபிபி-சி வோட்டர் சர்வே. அதேபோல் கோவாவிலும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்குமாம். ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகளின் படி, பாஜகவுக்கு 24 முதல் 28 இடங்கள் (38%) கிடைக்குமாம். காங்கிரஸ் கட்சிக்கு 1 முதல் 5 இடங்கள்தான் கிடைக்க வாய்ப்பிருக்கிறதாம்., ஆனால் ஆம் ஆத்மி கட்சி 3 முதல் 7 இடங்களில் (23%) வெல்லுமாம். கடந்த கோவா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வென்றிருந்தது. இம்முறை ஆம் ஆத்மியைவிட குறைவான இடங்களில்தான் காங்கிரஸ் வெல்லும் வாய்ப்பிருக்கிறதாம்.

மணிப்பூரிலும் பாஜக ஆட்சிதானாம்
மணிப்பூர் சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரஸுக்கு சற்றே ஆறுதலைத் தரக் கூடும். இக்கருத்து கணிப்புகளின் படி மணிப்பூரில் பாஜக 21 முதல் 25 இடங்களிலும் காங்கிரஸ் 18 முதல் 22 இடங்களிலும் வெல்லக் கூடுமாம். நாகா மக்கள் முன்னணி கட்சிக்கு 4 முதல் 8 இடங்கள் கிடைக்கக் கூடும் என்கிறது இக்கருத்து கணிப்பு முடிவுகள். அதாவது பாஜக 36% வாக்குகளையும் காங்கிரஸ் 34% வாக்குகளையும் மணிப்பூரில் அறுவடை செய்ய வாய்ப்பிருக்கிறது என்கிறது ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள். பொதுவாக பாஜகவை அசைக்க முடியாது என்பதையும் காங்கிரஸ் கரைந்து கொண்டே இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன இந்த கருத்து கணிப்பு முடிவுகள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications