Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 வாரம் தான் டைம்.. பாஸ்டேக் வருடாந்திர பாஸ் கட்டணம் உயர்கிறது.! ஏப்ரல் 1 முதல் ரேட் ஏறுகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்தாண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் கட்டணம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. தனிநபர் பயன்பாட்டிற்கான வாகனத்தை வைத்திருக்கும் பல லட்சம் பேர் இந்த ஆண்டு பாஸை வாங்கினர். இதற்கிடையே இந்த ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வரும் ஏப்ரல் 1 முதல் இது உயர்த்தப்படுவதாக NHAI எனப்படும் இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகளில் பயணிக்கத் தனியாக டோல் கட்டணம் செலுத்த வேண்டும். கடந்த காலங்களில் லாரி, டாக்சி போன்ற வணிக பயன்பாட்டு வாகனங்கள், தனி நபர் வாகனங்கள் என இரு தரப்புமே ஒவ்வொரு முறையும் சுங்கச் சாவடியை கடக்கும்போது கட்டணம் செலுத்த வேண்டும் என இருந்தது. அதை மாற்றும் வகையில் கடந்தாண்டு வருடாந்திர பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

NHAI FASTag Annual Pass Hike Rs 3 000 to Rs 3 075 from April 1 What are the major things to know

கட்டண உயர்வு

இதற்கிடையே NHAI எனப்படும் இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 2026-27 நிதியாண்டிற்கான ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் கட்டணத்தை மறுசீரமைத்துள்ளது. மார்ச் 12ம் தேதி வெளியான உத்தரவுப்படி, இந்த பாஸ்டேக் ஆண்டுக் கட்டணம் ₹3,000லிருந்து ₹3,075 ஆக உயருகிறது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனி நபர் பயன்பாட்டிற்கு கார்கள், ஜீப்கள், வேன் வைத்திருப்போருக்கு இது பொருந்தும்.

நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணிப்போர் வசதிக்காக 2025 சுதந்திர தினத்தன்று ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் கீழ் தனி நபர் பயன்பாட்டிற்காக வைத்திருக்கும் வாகனங்களுக்கு தனித்தனியாகச் சுங்கக் கட்டணங்கள் செலுத்தத் தேவையில்லை. இந்த வருடாந்திர பாஸ் வாங்கிவிட்டால் போதும். ஆக்டிவ் ஃபாஸ்டேக் கொண்ட எந்தவொரு கார், ஜீப் அல்லது வேனும் இத்திட்டத்திற்குத் தகுதியுடையாக இருக்கும்.

பாஸ்டேக் ஆண்டு பாஸ்

ஒரு முறை பாஸ்டேக் பாஸ் வாங்கினால் ஆண்டுக்கு வேலிடிட்டி இருக்கும். இந்த காலகட்டத்தில் ஒரு வாகனம் 200 முறை சுங்கச்சாவடிகளைக் கடக்கலாம் அல்லது ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும். ஓராண்டுக்குள் 200 முறை கடந்துவிட்டால் நீங்கள் புதிதாக பாஸ் எடுக்க வேண்டும். ஓராண்டுகள் 200 முறை பயன்படுத்த முடியவில்லை என்றாலும் அது அப்படியே முடிந்துவிடும். அதை நீடிக்க முடியாது. சுங்கச்சாவடிகளின் கட்டணம் வேறுபட்டாலும், இச்சலுகை எல்லா இடங்களிலும் பொருந்தும்.

மத்திய அரசு தகவல்

இந்த திட்டம் வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது, நாடு முழுவதும் 50 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸை பயன்படுத்துகின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் தனியார் கார்கள் மேற்கொள்ளும் சுங்கப் பரிவர்த்தனைகளில் கிட்டத்தட்ட 28% இப்போது ஆண்டு பாஸ் மூலம் நடைபெறுகின்றன.

பாஸ்டேக்

பாஸ்டேக்கை பொறுத்தவரை அது 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சுங்கச்சாவடிகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் சில்லறை பிரச்சினைகளைச் சரி செய்யவும் இந்த ஃபாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டது. சுங்கச்சாவடியில் இதன் மூலம் கட்டணம் செலுத்தும் போது நொடிகளில் கடந்து செல்ல முடிவதால் மக்கள் பலரும் இதை ஆர்வமாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இப்போது நாடு முழுக்க கிட்டத்தட்ட 11.86 கோடி ஃபாஸ்டேக்குகள் வழங்கப்பட்டுள்ளது. இது பாஸ்டேக் எந்தளவுக்குப் பிரபலமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

இந்த பாஸ்டேக்கின் ஆண்டு கட்டணத்தில் தான் இப்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வெறும் ரூ.75 மட்டுமே உயர்த்தப்படுகிறது என்ற போதிலும் அரசின் வருவாய் இதன் மூலம் கணிசமாக அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+