டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதி! ரஷ்யா விரையும் இந்திய உளவுதுறை! பரபர பின்னணி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் டாப் தலைவரை ஐஎஸ் பயங்கரவாதிகள் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், இது தொடர்பாக இந்திய அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

சமீப காலமாகவே இந்திய மண்ணில் தாக்குதல் நடத்துவது தொடர்பான பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

பீகாரில் கூட பிரதமர் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்திருந்தனர்.

ஆப்கன் மசூதி அருகே அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்.. 8 பேர் உடல் சிதறி பலி.. ஐஎஸ் அமைப்பு ‛அட்டாக்’ ஆப்கன் மசூதி அருகே அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்.. 8 பேர் உடல் சிதறி பலி.. ஐஎஸ் அமைப்பு ‛அட்டாக்’

 பயங்கரவாதி

பயங்கரவாதி

இந்தச் சூழலில் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையிலான செய்தி ஒன்று நேற்று வெளியானது. அதாவது இந்தியாவின் அரசில் முக்கிய இடத்தில் உள்ள தலைவரைக் குறித்து வைத்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்காக அந்த நபர் ரஷ்யாவில் இருந்து திட்டமிட்டு வந்துள்ளார். அவரை சரியான நேரத்தில் ரஷ்ய பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது.

 டாப் தலைவரைக் கொல்ல சதி

டாப் தலைவரைக் கொல்ல சதி

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த அந்த நபர் துருக்கியைச் சேர்ந்தவர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. ரஷ்யாவில் இருந்தபடி இந்தியாவின் முக்கிய தலைவரைக் கொலை செய்யச் சதி செய்து வந்துள்ளார், யாருக்கும் தெரியாத வகையில் இந்தியாவுக்கு வந்து டாப் தலைவரைக் கொலை செய்வதே அவரது திட்டமாகும். அவரை சரியான நேரத்தில் கைது செய்துள்ளதன் மூலம் இந்த பயங்கர திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது.

 இந்திய உளவு அமைப்புகள்

இந்திய உளவு அமைப்புகள்

இந்நிலையில் இந்தியாவின் உளவு அமைப்புகளான தேசியப் பாதுகாப்பு முகமை மற்றும் ஐபி அதிகாரிகள் ரஷ்ய உளவுத் துறை அதிகாரிகளைச் சந்திக்க உள்ளனர். ரஷ்ய உளவுத் துறை அதிகாரிகளிடம் இருந்து அந்த ஐஎஸ் பயங்கரவாதி குறித்த தரவுகளைப் பெறவும் அந்த பயங்கரவாதிக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டறியவும் திட்டமிட்டுள்ளனர். மேலும், பயங்கரவாதியை நேரில் சந்தித்து விசாரணை நடத்தும் இந்திய உளவுத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

டெலிகிராம்

டெலிகிராம்

அந்த ஐஎஸ் பயங்கரவாதி துருக்கியில் பயிற்சி பெற்றவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவரது உடைமைகளை ஆய்வு செய்ததில் டெலிகிராம் தளம் மூலம் அவர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளார். ரஷ்யா சென்றுள்ள இந்திய உளவுத் துறையினர், அவர் இந்தியாவில் எந்த நபருடனாவது தொடர்பில் உள்ளாரா என்பதைக் கண்டறியும் முயற்சியில் இறங்கி உள்ளனர்,

 ஐஎஸ்ஐஸ் அமைப்பு

ஐஎஸ்ஐஸ் அமைப்பு

ஐஎஸ்ஐஸ் அமைப்பு இந்தியாவிலும் தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி ஆபத்தான கருத்துகளைத் தொடர்ந்து பிரசாரம் செய்து வருவதாக மத்திய அரசு ஏற்கனவே எச்சரித்து உள்ளது. இதன் காரணமாக சைபர்ஸ்பேஸ் இதுபோன்ற கருத்துகள் பரவுவதைச் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் உன்னிப்பாகக் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

English summary
National Investigation Agency (NIA) and Intelligence Bureau are likely to visit Russia to investigate an ISIS suicide bomber: (ரஷ்யா செல்லும் இந்திய உளவு அமைப்பினர்) ISIS bomber arrested in Russia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X