டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீவிரவாதிகளுக்கு நிதி உதவி: காஷ்மீர் சுயேட்சை எம்.எல்.ஏ.வுக்கு என்.ஐ.ஏ. சம்மன்

Google Oneindia Tamil News

டெல்லி: தீவிரவாதிகளுக்கு நிதி உதவி அளித்த குற்றச்சாட்டின் கீழ் ஜம்மு காஷ்மீரின் சுயேட்சை எம்.எல்.ஏ. என்ஜினியர் ரஷீத்துக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) சம்மன் அனுப்பியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் 40,000 ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பதற்றமான நிலைமை நீடித்து வருகிறது. சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள் அனைவரையும் காஷ்மீரை விட்டு வெளியே அரசு உத்தரவிட்டுள்ளது.

NIA summon to Kashmir MLA Rasheed

ஜம்மு காஷ்மீரத்துக்கு சிறப்பு உரிமைகள் வழங்கும் அரசியல் சாசனப் பிரிவுகளை மத்திய அரசு ரத்து செய்யக் கூடும் என கூறப்படுகிற்து. இதனிடையே ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கைகளை தீவிரம் காட்டி வருகிறது மத்திய அரசு.

முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீது கிரிக்கெட் சங்க நிதி மோசடி வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. வங்கி நியமனங்கள் தொடர்பாக முன்னாள் முதல்வர் மெகபூபாவும் விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி அளித்த குற்றச்சாட்டின் கீழ் சுயேட்சை எம்.எல்.ஏ. ரஷீத்-க்கு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ரஷீத் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

English summary
National Ivestigation Agency has issued a summon to Kashmir MLA Rasheed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X