70% பலியாக வாய்ப்பு! கொரோனாவை விட ‛நிபா’ ரொம்ப மோசம்.. என்ன செய்ய வேண்டும்? ஐசிஎம்ஆர் எச்சரிக்கை
டெல்லி: நிபா வைரஸ் பாதிப்பு என்பது கொரோனாவை விட ரொம்ப மோசமானது. கொரோனாவை விட நிபா வைரஸ் பாதிப்பு என்பது அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம் என ஐசிஎம்ஆர் டைரக்டர் ஜெனரலும், டாக்டருமான ராஜிவ் பாஹல் எச்சரித்துள்ளதோடு, நிபா பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்வது பற்றி அவர் முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார்.
கேரளாவில் தற்போது நிபா வைரஸ் பரவல் உள்ளது. நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 3 பேர் பலியாகி உள்ளனர். தற்போது மொத்தம் 4 பேர் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை அம்மாநில சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள மற்றவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறிகுறிகள் இருப்பின் அவர்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவின் அண்டை மாநிலங்களாக உள்ள தமிழ்நாடு, கர்நாடகாவின் எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து பிற மாநிலங்களுக்கு நிபா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் நிபா வைரஸ் தொடர்பாக ஐசிஎம்ஆர் எனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் டைரக்டர் ஜெனரலான டாக்டர் ராஜிவ் பாஹல் கூறியதாவது:
தற்போது நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நிபா வைரஸால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் பரவல் என்பது ஏன் அதிகரித்து வருகிறது என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம்.
நிபா வைரஸை துவக்க நிலையில் கட்டுப்படுத்துவதற்கான மோனோக்னோனல் ஆன்டிபாடியின் டோஸ்களை வாங்க கோரியுள்ளோம். எங்களிடம் தற்போது 10 நோயாளிகளுக்கான மோனோக்ளோனல் ஆன்டிபாடி டோஸ்கள் மட்டுமே உள்ளன. அதோடு மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளின் செயல்திறன் குறித்த முதற்கட்ட சோதனைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.. இதனால் இந்த மருந்தை compassionate வகை மருந்தாகவே பயன்படுத்த முடியும்.

மேலும் கொரோனாவை விட நிபா வைரஸ் என்பது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். கொரோனா தொற்றில் 2 முதல் 3 சதவீத இறப்பு விகிதம் இருந்தது. ஆனால் நிபா வைரஸில் 40 முதல் 70 சதவீத இறப்பு விகிதம் இருக்கும். அந்த அளவுக்கு பாதிப்பின் வீரியம் அதிகமாக இருக்கம். பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்தே அவர்களது தொடர்பில் இருந்தவர்களுக்கே இதுவரை இந்த வைரஸ் பரவியுள்ளது.
நிபா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகள் உள்ளன. அவற்றில் கொரோனா பாதிப்பின்போது நாம் செய்த கைகழுவுதல், மாஸ்க் அணிதல் உள்ளிட்டவற்றை இப்போதும் தொடர்வது முக்கியம். பாதிக்கப்பட்டவர்களில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். தனிமைப்படுத்துதல், பாதுகாப்பாக இருத்தலும் முக்கியமானது'' என்றார்.
-
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications