நிர்பயா வழக்கு.. நாளை 4பேரை தூக்கிலிடப்போகும் ஹேங்மேன் பவன் ஜலாத்.. திகார் சிறையில் ஒத்திகை!
Recommended Video
டெல்லி: நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற மீரட்டில் இருந்து ஹேங்மேன் பவன் ஜலாத் என்பவர் டெல்லி திகார் சிறைக்கு வந்துள்ளார் அவர் தூக்குதண்டனையை நிறைவேற்றுவதற்காக இன்று மாதிரி ஒத்திகையை நடத்த உள்ளார்.
மருத்துவ மாணி நிர்பயா டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்து நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த நிர்பயா சில நாட்களில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 6 பேரை டெல்லி போலீஸார் அப்போது தேடிபிடித்து கைது செய்தனர்.

4பேருக்கு மரண தண்டனை
இவர்களில் ராம்சிங், டெல்லி திகார் சிறையில் 2013 ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். 2013 ம் ஆண்டு செப்டம்பரில் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த டெல்லி நீதிமன்றம் 18 வயது நிரம்பாத சிறுவன் என்பதால் இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. அதேநேரம் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.

பிப்1ல் தூக்கு
இந்நிலையில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் பிப்ரவரி 1ம் தேதி அதாவது நாளை காலை 6மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என டெல்லி நீதிமன்றம் டத் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

டம்மி முயற்சி
அதன்படி அவர்களை தூக்கிலிடுவதற்காக உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் அனுபவம் உள்ள காவலர் பவன் ஜலாத் டெல்லி திகார் சிறைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். பவன் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான ஒத்திகையை நடத்த உள்ளார்.

தூக்கிலிட வேண்டும்
முன்னதாக பவன் ஜலாத், குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் பணியை செய்ய தான் தயாராக இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு அந்த பணி கொடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள பவன் குப்தா, இந்த குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் போது எனக்கும், நிர்பயாவின் பெற்றோருக்கும், நாட்டிலுள்ள அனைவருக்கும் ஒரு பெரிய நிம்மதி கிடைக்கும் . இந்த வகையான மக்கள் தூக்கிலிடப்பட வேண்டும்," என்று கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications