டெல்லியில் ரிப்போர்ட்.. அதிமுக பாஜக கூட்டணி முறிவால் சிக்கல்? அறிக்கை சமர்ப்பித்த நிர்மலா சீதாராமன்!
டெல்லி: அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து பாஜக மேலிடத்திற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக நிர்வாகிகள் பலரிடம் கருத்துகளைக் கேட்டு விரிவான ரிப்போர்ட்டை டெல்லி தலைமைக்கு சமர்ப்பித்துள்ளார் நிர்மலா.
அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல்கள் நிகழ்ந்து வந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. பாஜக கூட்டணியில் இனி அதிமுக இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதிமுக தலைவர்கள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தவறாக பேசி வந்ததால் இந்த கூட்டணி முறிவு ஏற்பட்டதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாஜக தரப்பில் இந்த விவகாரத்தில் அமைதி காத்து வருகின்றனர்.

அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி முறிவால், அடுத்தகட்ட பிளான் தொடர்பாக அக்டோபர் 3ஆம் தேதி சென்னையில் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆலோசனை கூட்டத்துக்கு முன்பாக பாஜக மேலிட தலைவர்களை சந்திக்க அண்ணாமலை டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் இருந்து விமானம் மூலம் அண்ணாமலை நாளை டெல்லி செல்ல இருப்பதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் அமித் ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களை சந்தித்து, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய விவகாரம் தொடர்பாக பேச இருப்பதாகவும், அதிமுக வெளியேறிய நிலையில், யாருடன் கூட்டணி வைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிகிறது.
பாஜக தேசிய தலைவர்களின் கருத்தை பெற்று, அதன்படி சென்னையில் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் மாநில நிர்வாகிகளுக்கு அண்ணாமலை ஆலோசனை வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த பிறகு, அண்ணாமலை முதல்முறையாக டெல்லி பயணம் மேற்கொள்வதால், அனைவராலும் உற்று கவனிக்கப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து பாஜக மேலிடத்திற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்து நிர்மலா சீதாராமன், டெல்லி மேலிட தலைவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரிடமும் கருத்துகளை கேட்டு அதனை நிர்மலா சீதாராமன் அறிக்கையாக தயார் செய்துள்ளதாகவும், அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றதால் ஏற்படும் விளைவு, பாஜகவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது பற்றி விரிவான அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications