டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலணா முதல் 10 காசு வரை.. தங்கத்தில் அள்ளிவீச தயாராகும் நித்யானந்தா.. பரபரக்கும் அறிவிப்புகள்

Google Oneindia Tamil News

டெல்லி: விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் போது கைலாசாவின் கரன்சியாக தங்க நாணயங்கள் வெளியிடப்படும் என நித்தியானந்தா அறிவித்துள்ளார். இந்த கரன்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள 56 இந்து நாடுகளுடன் மட்டுமே வர்த்தகம் செய்வதாகவும் அவர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Nithyananda ரிலீஸ் செய்த Kailasa Gold Currency மற்றும் Kailasa Gold Coins | Oneindia Tamil

    பாலியல் புகாரில் சிக்கியுள்ள நித்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் நாட்டை விட்டே தப்பி சென்றுவிட்டார். அவர் கடைசியாக தனித்தீவான கைலாசாவை உருவாக்கி அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

    அந்த நாட்டிற்கான தனிக் கொடி, பாஸ்போர்ட் ஆகியவற்றை உருவாக்கியுள்ள நித்தியானந்தா, அந்த நாட்டில் குடியேற பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.

    சமயபுரம் மாரியம்மனின் பச்சைப்பட்டினி விரதம் முடிந்தவுடன் கொரோனா ஓடிவிடும் - நித்யானந்தாசமயபுரம் மாரியம்மனின் பச்சைப்பட்டினி விரதம் முடிந்தவுடன் கொரோனா ஓடிவிடும் - நித்யானந்தா

    சீரியஸாக இறங்கிய நித்தி

    சீரியஸாக இறங்கிய நித்தி

    இப்படியாக ஏதோ நித்தியானந்தா காமெடி செய்கிறார் என நினைத்த போது கடந்த வாரம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு கிடைத்த நிதியை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில் உள்ளேன். கைலாசாவுக்கு ரிசர்வ் வங்கி ஒன்றை தொடங்கியுள்ளேன்.

    உள்நாடு

    உள்நாடு

    உள்நாட்டுக்கு என ஒரு கரன்சியையும் வெளிநாட்டுக்கு என ஒரு கரன்சியையும் ரெடி செய்துள்ளேன். 300 பக்கம் கொண்ட பொருளாதார கொள்கைகளையும் வகுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் இன்று மேலும் கூறுகையில் கால் காசு முதல் 10 காசு வரையிலான தங்க நாணயங்கள் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும்.

    வர்த்தகம்

    வர்த்தகம்

    இவற்றை தமிழில் பொற்காசுகள் என அழைக்கப்படும். சமஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா, புஷ்ப முத்ரா என அழைக்கப்படும். இந்து மதத்தை பின்பற்றும் 56 இந்து நாடுகளுடன் வர்த்தகம் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    தனிமை

    தனிமை

    தான் தனியாக கைலாசாவில் குடியேறியபோது என்னை பார்த்து ஏராளமானோர் சிரித்தனர். ஆனால் இன்று கொரோனாவால் உலகமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று. நான் ஒரு தீர்க்கதரிசி என நித்தியானந்தா கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Swami Nithyanandha is to release Kailasa country's currency on Vinayagar Chathurthi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X