விரைவில் கைதாகிறாரா நித்தியானந்தா?.. இருப்பிடத்தை போலீஸிடம் சொல்ல போகும் அமெரிக்க சிஷ்யர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "ராஜசேகரன் நீ இருக்கும் இடத்தை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம்" என நித்தியானந்தாவை அவரது சீடர் ஒருவர் வீடியோ மூலம் விமர்சனம் செய்யும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

Recommended Video

    விரைவில் கைதாகிறாரா நித்தியானந்தா?.. இருப்பிடத்தை போலீஸிடம் சொல்ல போகும் அமெரிக்க சிஷ்யர்

    பெங்களூரில் பாலியல் வழக்கில் சிக்கிய நித்தியானந்தாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு பெங்களூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் அவரோ ஆஜராகாமல் எங்கோ தப்பி சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் அவர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக வீடியோ மூலம் தெரிவித்தார். கைலாசா நாட்டிற்கு தனிக் கொடி, பாஸ்போர்ட், கரன்சி ஆகியவற்றையும் அவர் வெளியிட்டிருந்தார்.

    கைலாசா நாடு

    கைலாசா நாடு

    மேலும் கைலாசா நாட்டில் தொழில் தொடங்க அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். அதில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை மாவட்டத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். போலீஸிடம் நித்தியானந்தா சிக்காவிட்டாலும் தினந்தோறும் அவர் பேசும் வீடியோ இணையதளத்தில் வைரலானது.

    யூடியூப்

    யூடியூப்

    இந்த யூடியூப்பின் ஐபி அட்ரஸை வைத்து நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்றும் போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் கொரோனா பாதிக்கும் என முன்பே அறிந்து கொண்டதால் கைலாசாவில் தனிமைப்படுத்திக் கொண்ட தீர்க்கதரிசி நான் என நித்தி பெருமிதம் பேசினார். மேலும் உலக மக்கள் தனிமைப்படுத்திக் கொண்டதையும் கிண்டல் செய்தார்.

    கைலாசா வீடியோ

    கைலாசா வீடியோ

    இந்த நிலையில் கைலாசாவில் நித்தியானந்தா தீபாவளி பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகின. மேலும் அதில் பட்டாசை வெடித்து விட்டு நித்தியானந்தா ஜம்ப் செய்து ஓடும் காட்சிகளை நெட்டிசன்கள் டிரோல் செய்தனர். இந்த நிலையில நித்தியானந்தாவின் சீடர் ஒருவர் அவரது ஆசிரமத்திலிருந்து தப்பி அப்ரூவராக மாறிய வீடியோ வைரலாகி வருகிறது.

    நித்தியானந்தா சீடர்

    நித்தியானந்தா சீடர்

    இதுகுறித்து அந்த வீடியோவில் அமெரிக்காவை சேர்ந்த நித்தியானந்தாவின் சீடர் ஒருவர், "ராஜசேகரன் நீ எத்தனை பேரை இதுவரை ஏமாற்றி இருக்க! இப்பவும் ஏமாத்திட்டு இருக்க! நீ எங்கே இருக்கேன்னு யாருக்கும் தெரியாதுனு நினைச்சிட்டு இருக்கியா?

    சிறைக்கு போகும் நித்தி?

    சிறைக்கு போகும் நித்தி?


    நீ இருக்கிற இடத்தை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். சீக்கிரம் நீ சிறைக்கு போகப் போற" என்று காவி உடையுடன் சாமியார் கிடப்பில், ராஜசேகரன் என அந்த நபர் அழைப்பது ஷாட்ஷாத் நித்தியானந்தாவைத்தான். கைலாசாவில் நித்தியானந்தாவுக்கு பண பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+