பட்ஜெட்டில் மோடி மறைத்த உண்மைகள்; போட்டு உடைத்த நிதி ஆயோக் அதிகாரி
“2016 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியை பெரும் அளவில் குறைக்க முயன்றார்” என்று நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
நிதிநிலை சார்ந்த கருத்தரங்கம் ஒன்றில் அவர் கலந்துகொண்ட அவர் சில கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்திருந்ததாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மத்திய அரசு தனக்கு வரும் வரி வருவாயில் 50% நிதியை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கருத்து முன்வைத்து வந்தார் நரேந்திர மோடி. ஆனால், பிரதமராக அவர் பதவியேற்றதும் அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது.
சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையம் என்ற அரசு சாரா அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டார் நிதி ஆயோக் செயலதிகாரி பி வி ஆர் சுப்பிரமணியம் 'இந்தியாவின் பொருளாதாரம்’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் சில முக்கியமான விசயங்களைப் பற்றிக் கூறி இருந்தார்.

2014 ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு வரும் வரி வருவாயில் 42% நிதிய மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் நிதி ஆயோக் தெரிவித்ததாகவும், ஆனால் அதைப் பிரதமர் நரேந்திர மோடி 33% ஆகக் குறைக்க வேண்டும் எனக் கூறியதாகவும் சுப்பிரமணியம் இப்போது தெரிவித்துள்ளார்.
அப்போது நிதி ஆயோக் தலைவராக இருந்த யோகா வி. ரெட்டி அதை ஏற்க மறுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் இந்தத் தகவல்களை மறைக்க மத்திய பட்ஜெட்டில் என்ன மாதிரியான தகவல்கள் மறைக்கப்பட்டு வருகின்றன என்பதையும் விளக்கிப் பேசி இருந்தார்.

அரசாங்கத்தின் அறிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை என்றான் ஹிட்டன் பர்க் (Hidden park) அறிக்கைகள் மூலம் அவை வெளிப்படுத்தப்படலாம் என்ற கருத்தையும் அவர் முன்வைத்துப் பேசியுள்ளார். இவரது கருத்துகளால் இந்திய அரசின் நிர்வாக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் கட்டமைப்பில் அதிக கவனம் மோடி அரசு செலுத்தி வருவதால், அதிக நிதி மத்திய அரசுக்குத் தேவைப்படலாம். ஆகவே குறைக்கச் சொல்லி இருக்கலாம் என சில பொருளாதார நிபுணர்கள் சுப்பிரமணியம் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சுப்பிரமணியம் பேசிய குறித்து ஆனந்த் சீனிவாசன் பேசி உள்ளக் கருத்துகள் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

“மத்திய அரசின் பட்ஜெட்டில் பல தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளது என்று சுப்பிரமணியம் சொல்லி இருக்கிறார். ஆகவே பட்ஜெட்டை வைத்து ரொம்ப நேரம் ஆய்வு செய்தால்தான் அதில் உள்ள உண்மையான விசயங்களைக் கண்டுபிடிக்க முடியும். அதானி செய்த முறைகேடுகளை ஹிட்டன் பர்க் வெளியே கொண்டுவந்தது. ஆகவே, ஹிட்டன் பர்க் போன்ற நிறுவனங்கள் ஆய்வு செய்தால் பல உண்மைகள் இன்னும் தெரிய வரும் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.
நரேந்திர மோடி அரசு எவ்வளவு கடன் வாங்கி உள்ளது என்பதைக்கூட இன்னும் உண்மையாகத் தெரிவிக்கவில்லை. நிறுவனங்களை வைத்து அரசு பெற்ற கடன்கள் எவ்வளவு என்பதற்கான கணக்கு சரியாக இன்னும் காட்டப்படவில்லை என்று கூறியுள்ளார்.

2013இல் மன்மோகன் சிங் அவரது ஆட்சிக்காலத்தில் ரெட்டியை நிதி ஆணையத்தில் அதிகாரியாக நியமித்திருந்தார். அவர் ஒரு நேர்மையான அதிகாரி. அந்தக் காலகட்டத்தில் மோடி குஜராத் முதல்வராக இருந்தார். அப்போது மாநில அரசும் மத்திய அரசும் வரி வருவாயை தலா 50% ஆகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ஆனால், இப்போது பி வி ஆர் சுப்பிரமணியம் என்ன சொல்லி இருக்கிறார் என்றால், நிதி அமைச்சகத்திலிருந்து யாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நானும் பிரதமர் மோடியும் ரெட்டியும் கூடிப் பேசினோம். அந்தக் கூட்டத்தில் மோதி அழுத்தம் கொடுத்தார். இப்போது உள்ள 32% அப்படியே இருக்கட்டும் என்றார். அதற்கு ரெட்டி முடியவே முடியாது என மறுத்தார். உயர்த்தித்தான் ஆகவேண்டும் என்று வாதிட்டார். அதற்கு 32இல் இருந்து 33% ஏற்றுங்கள் போதும் என மோடி சொல்லி இருக்கிறார்.
அந்தக் கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மோடியிடம் போய் சொல்லுங்கள். இந்த நிதி ஆணையம் என்பது ஒரு இந்திய அரசியலமைப்பின் அதிகாரப்பூர்வமான பதவி. அவர் சொல்வதைப் போல் நான் மாற்றிச் சொல்ல முடியாது. மாநில அரசுக்கு 42% என்பது இறுதியான என் முடிவு. மத்திய அரசுக்கு 58% என்பது என் முடிவு. அதை மாற்ற முடியாது என்று கூறியுள்ளார் ரெட்டி.

இதற்கு முன்பாகவே பட்ஜெட் தயாராகிவிட்டது. ஆகவே, மோடியின் முடிவு படி பட்ஜெட்டை 2 நாளில் மாற்றி எழுதினோம் என்று பல உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார் நிதி ஆயோக் சுப்பிரமணியம். இதைப்போலவே ஒப்பந்தம் விட்டு வேலை தொடங்குவதற்கு முன்பாகவே அரசு நிதியை வழங்கி இருக்கிறது. இந்த முறை எல்லாம் சரியானவை அல்ல என்றும் அவர் வெளிப்படையாக புட்டுப் புட்டு வைத்துள்ளார்” என இந்தச் சர்ச்சை குறித்து மேலும் சில விளக்கங்களை அளித்துள்ளார் ஆனந்த் சீனிவாசன்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications