சுகாதார துறை தரவரிசை: தமிழகம் 2ஆம் இடம்.. ஆதிக்கம் செலுத்தும் தென் மாநிலங்கள்.. உ.பி தான் கடைசி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு வெளியிட்டுள்ள சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் பெரிய மாநிலங்களுக்கான பிரிவில் தமிழ்நாடு 2ஆம் இடம் பிடித்துள்ள நிலையில், உத்தரப் பிரதேசம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

மத்திய அரசின் நிதி ஆயோக் சார்பில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களில் சுகாதார உட்கட்டமைப்பை ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டும். 2014 முதல் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

இதுவரை 3 கட்ட தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது நான்காம் கட்ட தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தாய் சேய் நலம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

 தமிழகம் முதலிடம்

தமிழகம் முதலிடம்

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பெரிய மாநிலங்களுக்கான சுகாதார தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. இதில் தமிழ்நாட்டின் சுகாதாரத் துறைக்கு 72.42 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2018-19, 2019-20 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலிலும் தமிழ்நாடு 2ஆம் இடத்தையே பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 கேரளா முதல் இடம்

கேரளா முதல் இடம்

நிதி ஆயோக்கின் இந்த பட்டியலில் அண்டை மாநிலமான கேரளா முதல் இடத்தை பிடித்துள்ளது. கேரளாவுக்கு மொத்தம் 82.20 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018-19, 2019-20 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலிலும் கேரளா முதல் இடத்தையே பிடித்திருந்தது

 டாப் 4 தென் மாநிலங்கள்

டாப் 4 தென் மாநிலங்கள்

கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக தெலங்கானா 69.66 மதிப்பெண்களுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. அதேபோல ஆந்திரப் பிரதேசம் மாநிலம் இந்தப் பட்டியலில் 4ஆவது இடத்தை பிடித்துள்ளது. ஆந்திரா இதில் 69.95 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. முதல் 4 இடங்களையும் தென் மாநிலங்களே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 டாப் 10

டாப் 10

இதையடுத்து 5ஆம் இடத்தில் 69.14 புள்ளிகளுடன் மகாராஷ்டிரா பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் 6ஆவது இடத்தை பிடித்துள்ளது. இமாச்சல் பிரதேசம். பஞ்சாப், கர்நாடக மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் டாப் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளன.

 கடைசி இடத்தில் உபி

கடைசி இடத்தில் உபி

இந்த சுகாதாரத் துறை பட்டியலில் நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. அந்த மாநிலம் வெறும் 30.57 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளது. அதேநேரம் கடந்த சில ஆண்டுகளை ஒப்பீடும் போது, உத்தரப் பிரதேசத்தில் மருத்துவ உட்கட்டமைப்பு அதிகம் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சிறிய மாநிலங்கள்

சிறிய மாநிலங்கள்

அதேபோல சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் மிசோரம் முதல் இடத்தில் உள்ளது. யூனியன் பிரதேசங்களுக்கான பட்டியலில் டெல்லி மற்றும் ஜம்மு & காஷ்மீர் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன. ஆனால் இந்த இரண்டு மாநிலங்களிலும் மருத்துவ உட்கட்டமைப்பு வேகமாக மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது உலக வங்கியின் உதவியுடன் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்தப் பட்டியலை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+