Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இது" தான் லிமிட்.. இனி நாம் ரோட்டில் சல்லுனு ஸ்பீட்டாக பறக்கலாம்! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் உண்மையில் சாலையில் அதிகபட்சம் எந்த வேகத்தில் செல்லலாம் என்பது பலருக்கும் தெரியாது. இங்கு பெரும்பலனோர் தங்கள் இஷ்டப்படியே வாகனங்களை இயக்குகிறார்கள். அது எந்தளவுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இதற்கிடையே சாலைகள் அதிகபட்சம் எந்த வேகத்தில் செல்லலாம் என்பது குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பு கணிசமான வளர்ந்துள்ளது. கடந்த மார்ச் 2020ல் நாட்டில் 1.32 லட்சம் கி.மீ தூரத்திற்குத் தேசிய நெடுஞ்சாலைகள் இருந்தன. அது இப்போது 1.46 லட்சம் கிமீ ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக HSCs எனப்படும் அதிவேக வழித்தடங்கள் மற்றும் விரைவுச் சாலைகளின் நீளம் 228 கி.மீட்டரிலிருந்து 2,636 கி.மீட்டராக அதிகரித்துள்ளது.

Nitin Gadkari explains the top Speed Limit for Expressways and National Highways across India

புதிய எக்ஸ்பிரஸ் சாலைகள்

இதுபோல சென்னை- பெங்களூர் தொடங்கிப் பல எக்ஸ்பிரஸ் சாலை திட்டங்கள் படுவேகமாக நடந்து வருகிறது. அவை அனைத்தும் அடுத்த சில ஆண்டுகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது. இதுபோல தேசிய நெடுஞ்சாலைகள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், அதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கான வேக வரம்புகள் குறித்து அறிந்து கொள்வது அவசியமாகிறது. அப்போது தான் அனைத்து தரப்பினருக்கும் சாலை பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

இந்த வேக வரம்புகள் சாலைகளின் வகை, வாகனங்களின் வகைகளைப் பொறுத்து வேறுபடுகின்றன. இவை எல்லாம் சேர்த்துத் தான் வாகனப் போக்குவரத்தைச் சீராக்க உதவுகிறது. இப்போது நடந்து வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவை எம்.பி. டாக்டர் பீம் சிங் இது தொடர்பான கேள்வியை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரியிடம் எழுப்பினார்.

வேக வரம்பு என்ன

அதாவது தேசிய நெடுஞ்சாலைகளில் தற்போதுள்ள வேக வரம்புகள் என்ன? அவற்றை அதிகரிக்க அரசுக்கு ஏதேனும் திட்டங்கள் உள்ளதா? என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், வேக வரம்புகள் குறித்து எதாவது ஆய்வுகள் அல்லது முன்னோடி திட்டங்கள் எதாவது மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கடந்த வாரம் எழுத்துப்பூர்வ பதிலை அளித்திருந்தார்.

நிதின் கட்கரி

அதில் நாட்டின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் ஐஆர்எஸ் எனப்படும் இந்தியச் சாலைகள் காங்கிரஸ் நிர்ணயித்த தரங்களை நிறைவேற்றும் வகையிலேயே போடப்படுவதாகத் தெரிவித்தார். விரைவுச் சாலைகளுக்கு மணிக்கு அதிகபட்சம் 120 கி.மீ மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மணிக்கு அதிகபட்சம் 100 கி.மீ வேகத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதாக நிதின் கட்கரி தெரிவித்தார். அதேநேரம் எல்லா இடங்களிலும் இது பொருந்தாது என்றும் ஒவ்வொரு நிலப்பரப்பைப் பொறுத்து இது மாறுபடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் நிதின் கட்காரி மேலும் கூறுகையில், "மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், 2018 ஏப்ரல் 6ஆம் தேதி இது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்தியாவில் உள்ள பல்வேறு வகையான சாலைகளில் (விரைவுச் சாலைகள், 4 வழி மற்றும் அதற்கு மேற்பட்ட சாலைகள், நகராட்சி சாலைகள்) வாகனங்களின் அதிகபட்சம் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்பதை அதில் குறிப்பிட்டிருந்தோம்.

அதிகபட்ச வேகம் இதுதான்

அதன்படி இப்போது எக்ஸ்பிரஸ் சாலைகளில் போக்குவரத்து வாகனங்கள் மணிக்கு அதிகபட்சம் 80 கி.மீ வேகத்தில் செல்லாம். அதேநேரம் பெர்சனல் வாகனங்கள் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் செல்லலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதாவது லாரி, டிரக், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்கள் எக்ஸ்பிரஸ் சாலைகளில் அதிகபட்சம் 80 கிமீ வேகத்தில் செல்லலாம். அதேநேரம் கார்கள் மணிக்கு 120 கி.மீ வரையிலான வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+