கொரோனா காலத்தில் இந்த இரு விஷயங்களை செய்தேன்.. மாதம் ரூ 4 லட்சம் வருமானம்.. நிதின் கட்கரி ஓபன் டாக்!
டெல்லி: கொரோனா காலகட்டத்தில் இரு விஷயங்களை செய்ததன் மூலம் யூடியூப்பால் மாதத்திற்கு ரூ 4 லட்சம் பெற்றதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் இருந்து கொரோனா எனும் தொற்றுநோய் 200- க்கும் மேற்பட்ட நாடுகளை பெரும் துயரத்திற்குள்ளாகியது. இந்த தொற்றால் நாட்டின் பொருளாதாரம், தனி மனிதனின் பொருளாதாரம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டது.
இந்த ஒன்றரை ஆண்டுகளில் தொற்று தீவிரமடைந்த போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், சுற்றுலா தளங்கள் என அனைத்தும் மூடப்பட்டுவிட்டது.

வீட்டுக்குள் முடக்கம்
அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற நேரங்களில் வெளியே வர தடைவிதிக்கப்பட்டது. இதனால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த மக்கள் வீட்டு வேலைகள், விளையாட்டு, கணினி, சமையல், பூ வேலைப்பாடு, பெயிண்டிங், ஓவியம் உள்ளிட்ட கலைகளை கற்றறிந்தனர். இன்னும் சில பிரபலங்களும் மக்களும் மாடி தோட்டம் எனும் அருமையான ஒரு இயற்கையோடு ஒன்றியிருக்கும் முயற்சியை கையிலெடுத்தனர்.

அரசியல் தலைவர்கள்
கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் லாக்டவுனில் செய்யும் வீட்டு வேலைகள், புதிய முயற்சிகள், மாடி தோட்டங்களை பராமரித்தல் உள்ளிட்டவற்றை தங்களது ரசிகர்களும் தொண்டர்களுக்கும் சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர். இந்த காலகட்டத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று தங்கள் திறமைகளை வெளியுலகிற்கு வெளிப்படுத்தும் செயல்களையும் செய்தனர்.

நிதின் கட்கரி
ஆம். யூடியூப் சேனலை தொடங்கி அதில் தங்களுக்கு தெரிந்த வித்தைகளை செய்து வருமானம் ஈட்டி வந்தனர். இந்த லாக்டவுன் காலகட்டத்தில் பொழுதுபோக்கிற்காக தொடங்கப்பட்ட யூடியூப் சேனல்கள் மூலம் நிறைய பேருக்கு வருமானம் குவிகிறது. அந்த வகையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒரு விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நிதின் கட்கரியின் யூடியூப் சேனல்
இது குறித்து அவர் பேசுகையில் கொரோனா நேரத்தில் நான் இரு விஷயங்களை செய்தேன். ஒன்று என் வீட்டில் சமைக்க தொடங்கினேன், இன்னொன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நிறைய பேருக்கு உரையாற்றினேன். இவற்றை எனது யூடியூப்பில் பதிவேற்றம் செய்ததன் மூலம் நிறைய வியூயர்ஸ் வந்தனர். இதனால் எனக்கு மாதந்தோறும் ரூ 4 லட்சத்தை யூடியூப் செலுத்தி வருகிறது என தெரிவித்தார் நிதின் கட்கரி. இந்த யூடியூப் சேனல் மூலம் அவருக்கு 2 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications