திருப்பரங்குன்றம் தீபத்தை எதிர்ப்போருக்கு அரசியலில் இடமில்லை - பதவியேற்றதும் திமுகவை தாக்கிய நிதின்
டெல்லி: ‛‛சமீபத்தில் தமிழகத்தில் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை எதிர்க்கட்சிகள் தடுத்தன. இதனை நாம் பார்த்தோம். இது ஒரு சம்பவம் மட்டும் அல்ல. இன்னும் பல விஷயங்களை எதிர்க்கட்சிகள் செய்கின்றன. தீர்ப்பு வழங்கிய நீதிபதியை பதவி நீக்கம் செய்ய அவர்கள் முயற்சித்தனர். ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத்திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் அரசியலில் இடம் இல்லை என்ற நிலையை நாம் உறுதி செய்ய வேண்டும்'' என பாஜக தேசிய தலைவராக பதவியேற்ற உடன் நிதின் நபின் தனது முதல் உரையில் சூளுரைத்தார்.
பாஜகவின் தேசிய தலைவர் தேர்தலில் செயல் தலைவராக உள்ள நிதின் நபின் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவர் போட்டியின்றி பாஜகவின் தேசிய தலைவராக தேர்வானார்.

இதையடுத்து இன்று பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவராக செயல்பட்ட ஜேபி நட்டா, முன்னாள் தேசிய தலைவர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா ஆகியோர் முன்னிலையில் நிதின் நபின் தேசிய தலைவராக பொறுப்பேற்றார்.
அதன்பிறகு நிதின் நபின் கட்சி தலைவர்கள், கட்சி தொண்டர்கள் மத்தியில் முதல் முறையாக தேசிய தலைவராக உரையாற்றினார். அப்போது அவர் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சீண்டினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
சமீபத்தில் தமிழகத்தில் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை எதிர்க்கட்சிகள் தடுத்தன. இதனை நாம் பார்த்தோம். இது ஒரு சம்பவம் மட்டும் அல்ல. இன்னும் பல விஷயங்களை எதிர்க்கட்சிகள் செய்கின்றன. தீர்ப்பு வழங்கிய நீதிபதியை பதவி நீக்கம் செய்ய அவர்கள் முயற்சித்தனர். ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத்திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் அரசியலில் இடம் இல்லை என்ற நிலையை நாம் உறுதி செய்ய வேண்டும்.
அடுத்த சில மாதங்களில் தமிழகம், அசாம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் புதுச்சேரிகளில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் மக்கள்தொகை தொடர்பான விவகாரம் பற்றி பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மாறி வரும் மக்கள்தொகை அமைப்பு அங்குள்ள சூழலை மாற்றுகிறது. இது நமக்கு சவாலை ஏற்படுத்துகிறது. இருப்பினும் பஜாக தொண்டர்கள் கடினமாக உழைத்து இந்த 5 மாநிங்களிலும் பாஜகவை வெற்றி றெ செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications