தப்பி ஓடிய நித்தி- அகதியாக ஐநாவில் கெஞ்சல்- பாஜக மீது கொலைசதி புகார்- அதிமுக, திமுக மீதும் பாய்ச்சல்
Recommended Video
டெல்லி: இந்தியாவில் 10 ஆண்டுகளில் தம்மை 100 முறை கொலை செய்ய பாஜக, ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி), பஜ்ரங்தள் ஆகியவை முயற்சித்ததாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திடம் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா புகார் அளித்திருப்பதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
பலாத்கார வழக்குகள், பெண்குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்படுகிற சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா. கடந்த ஆண்டே போலி பாஸ்போர்ட் மூலம் நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.
தற்போது தென் அமெரிக்காவில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி கைலாசா என்கிற தனிநாட்டை பிரகடனம் செய்திருக்கிறார். அத்துடன் இந்திய அரசு மீதும் இந்திய அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மீதும் ஐநாவில் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்திருக்கிறார் நித்தியானந்தா.

கொலை முயற்சிகள்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திடம் கொடுத்த மனுவில் இந்தியாவில் தம்மை 10 ஆண்டுகளில் 100 முறை கொல்ல முயற்சி நடந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார் நித்தியானந்தா. ஐநா மனித உரிமைகள் ஆணையத்திடம் நித்தியானந்தா கொடுத்த மனுவில் இடம்பெற்றுள்ள விவரம்:

பாஜக, ஆர்.எஸ்.எஸ். மீது புகார்
மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனகர்த்தவாக இருக்கிறேன். இந்து ஆதிசைவ சிறுபான்மை சமூகத்தின் ஆன்மீகத் தலைவராகவும் இருக்கிறேன். 2010-ம் ஆண்டு முதல் 2014 வஐ பாஜக, ஆர்.எஸ்.எஸ். தூண்டுதல்களில் எங்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ஆண்மை சோதனை
கர்நாடகா முதல்வராக சதானந்தா கவுடா பதவி வகித்த போது பிடதி ஆசிரமம் தீக்கிரையாக்கப்பட்டது. பலாத்கார வழக்குகள் தொடரப்பட்டு ஆண்மை பரிசோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்தனர்.

விதம் விதமான கொலை முயற்சிகள்
10 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட முறை இந்துத்துவா தீவிரவாதிகள் என்னை கொல்ல முயற்சித்தனர். ஒருமுறை உணவில் விஷம் கலந்து கொடுத்தனர். பின்னர் கற்களை வீசியும் கொல்ல முயற்சித்தனர். காரை விபத்துக்குள்ளாக்கி கொலை செய்ய திட்டமிட்டனர்.

உயிர்தப்பிய நிகழ்வு
2018-ம் ஆண்டு ஜூனில் ஆசிரமத்துக்குள் முகமூடி கொலையாளிகள் நுழைந்து கொல்ல முயன்றனர். அப்போது கழிவறைக்குள் ஓடி பதுங்கி தாழ்ப்பாள் போட்டு உயிர் தப்பினேன்.

யார் யார் சதிகாரர்கள்?
எங்களை அழிக்க பாஜக, ஆர்,எஸ்,எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகியவை முயற்சித்தன. தமிழகத்தில் அதிமுக, திமுக, பெரியார் தி.க. சிபிஐ, இஸ்லாமிய கிறிஸ்தவ அமைப்புகள் அவதூறுகளையும் வன்முறைகளையும் ஏற்படுத்தினர்.

மொழி தீவிரவாதிகள்
கர்நாடகாவின் ரட்சண வேதிகே என்ற மொழி தீவிரவாத அமைப்பும் வன்முறையை எங்களுக்கு எதிராக நடத்தின. எங்களது இந்து ஆதி சைவ சிறுபான்மை சமூகத்தில் 3 கோடி பேர் இருக்கிறோம்.

அகதி அங்கீகாரம்
எங்களால் தற்போது இந்தியாவுக்கு திரும்ப முடியாது. ஆகையால் எங்களது கைலாசா தனிநாட்டை அங்கீகரித்து அகதி அந்தஸ்து அளிக்க வேண்டுகிறோம். இவ்வாறு நித்தியானந்தா மனுவில் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications