"சிரித்து கொண்டே ஏதாவது சொன்னால் குற்றமில்லை.." வெறுப்பு பேச்சு வழக்கில் டெல்லி ஐகோர்ட் பரபர கருத்து
டெல்லி: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு எதிரான வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் முக்கிய கருத்து தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு எதிராக வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சந்திர தாரி சிங் விசாரித்து வந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் தான் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

டெல்லி கலவரம்
கடந்த 2020 வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்திற்கு முன்பு வெறுப்பைப் பரப்பும் வகையில் பேசியதாக அனுராக் தாக்கூர் மற்றும் பர்வேஷ் வர்மா மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இந்த கருத்து தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் சமயத்தில் பேசிய அமைச்சர் அனுராக் தாக்கூர், போராட்டக்காரர்களுக்கு எதிராகச் செயல்படுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

மத்திய அமைச்சர்
அமைச்சரின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் கடந்த 2020 ஜனவரி 29ஆம் தேதி அனுராக் தாக்கூருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில் தான் அனுராக் தாக்கூர் மீது வெறுப்பு பேச்சுக்காக எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு மனுதாரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது தான் வெறுப்பு பேச்சு தொடர்பாக நீதிமன்றம் முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

நீதிபதி கருத்து
இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி சந்திர தாரி சிங் , "நீங்கள் புன்னகையுடன் ஏதாவது பேசுகிறீர்கள் என்றால், அது குற்றம் இல்லை. அதேநேரம் மற்றவர்களைப் புண்படுத்தும் வகையில் ஏதாவது பேசினால், நிச்சயமாக அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் சார்ந்த பேச்சுகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்வதற்கு முன் ஒரு சமநிலையை நாம் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

போராட்டம்
அப்போது தான் நீதிபதி சந்திர தாரி சிங், "தேர்தல் நேரத்தில் பேசப்படும் பேச்சுக்கும் மற்ற நேரங்களில் பேசப்படும் பேச்சுக்கும் வித்தியாசம் உள்ளது. ஏனென்றால் தேர்தல் நேரத்தைப் பேச்சும் பேச்சுகளை வழக்கமான பேச்சாக எடுத்துக் கொள்ள முடியாது. அதேநேரம் சாதாரண நேரத்தில் அதேபோல பேசுகிறீர்கள் என்றால் அதன் மூலம் எதையோ செய்ய விரும்புகிறீர்கள் என அர்த்தம்.

தேர்தல் நேரங்கள்
தேர்தல் சமயத்தில் அரசியல்வாதிகள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளும்படி பேசிக் கொள்வது இயல்பானது. அது தவறானது தான் என்றாலும், அதில் இருக்கும் குற்றத்தன்மையைப் பார்க்க வேண்டும்" என்றார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், டெல்லியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிஏஏ போராட்டங்களின் போது, அமைச்சர் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

நோக்கம்
மேலும், குறிப்பிட்ட சமூகத்தைக் குறி வைத்து அவர் பேசியுள்ளதாகவும் வாதிட்டனர். அதற்கு நீதிபதி, ''இந்தப் பேச்சில் வகுப்புவாத நோக்கம் எங்கே இருக்கிறது?'' என்று கேட்டார். மேலும், போராட்டக்காரர்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டும் வகையில் ஏதும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications