டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இ பாஸ் கூடாது .. 2 குட் நியூஸ்.. அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

Google Oneindia Tamil News

டெல்லி; பொதுமக்கள் வெளியூர் செல்ல, இ-பாஸ் போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில் மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.

Recommended Video

    Tasmac இல்லைனா Tamilnadu-க்கு வருமானம் இல்ல - Mohan Kumaramangalam | Oneindia Tamil

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பொது போகுவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. மாவட்டங்களுக்குள் மட்டும் தனிநபர்கள் பயணிக்க அனுமதிக்க வழங்கப்பட்டது.

    வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு பயணிக்க இ-பாஸ் பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த பாஸ் பெற கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதால் பலருக்கும் கிடைக்கவில்லை.

    பொங்கி எழுந்த கனிமொழி.. பொங்கி எழுந்த கனிமொழி.. "இன்னும் எத்தனை நாள் இப்படி பொறுத்து கொள்வது?" ஆயுஷ் அமைச்சகத்துக்கு லெட்டர்

    அனைவருக்கும் இ பாஸ்

    அனைவருக்கும் இ பாஸ்

    இதனால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், தமிழகத்தில் இபாஸ் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 17 ஆம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டு, விண்ணப்பித்த அனைவருக்கும் இபாஸ் வழங்கப்படுகிறது. அதே சமயம் , போக்குவரத்துக்கு எந்த தளர்வும் வழங்கப்படவில்லை. எனினும் சரக்கு போக்குவரத்துக்கு ஆரம்பம் முதலே தமிழக அரசு எந்த தடையும் விதிக்கப்படவில்லை

    இ பாஸ் கூடாது

    இ பாஸ் கூடாது

    இந்நிலையில் மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், அதில், தனிநபர் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்துக்காக மாநிலத்துக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான இயக்கத்திற்கு எந்த தடையும் இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

    வழிகாட்டுதலை மீறக்கூடாது

    வழிகாட்டுதலை மீறக்கூடாது

    ஏனெனில் பொதுமக்கள் பயணிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
    மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலை மீறும் வகையில் மாநில அரசுகள் இபாஸ் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல்வர் முடிவெடுப்பார்

    முதல்வர் முடிவெடுப்பார்

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு எடுப்பார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார், மாநிலங்களுக்கிடையேயான சரக்குப் போக்குவரத்து மற்றும் தனிநபர் பயணிப்பது குறித்து முதல்வர் ஆலோசித்து முடிவு எடுப்பார் என்றும கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே தமிழ அரசின் நிலைப்பாடு என்றும் ஜெயக்குமார் கூறினார்.

    English summary
    The Centre on Saturday asked all states and Union Territories to not put any restriction on the movement of persons and goods as reports of such obstructions were impacting supply chains, resulting in “disruption in economic activity and employment”. The Centre requested that no restrictions be imposed and also urged the authorities concerned to ensure that the unlock guidelines were followed in letter and spirit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X