நட்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.. அடித்துக் கூறிய அமெரிக்கா.. வெடித்து பேசிய ரஷ்யா.. அலறிய ஜி20 மாநாடு
இந்தியாவின் தலைமையில் நடைபெறும் ஜி20 மாநாடு உலக நாடுகளின் கவனத்தை பெற்றது. உக்ரைன் போரால் ஏற்பட்டிருக்கும் இந்த அசாதாரண சூழலை இந்தியாவால் மட்டுமே தணிக்க முடியும் என சர்வதேச நாடுகள் நம்பிக்கை கொண்டிருந்தன.
டெல்லி: உலகமே உற்று கவனித்து வரும் ஜி20 மாநாட்டில் உக்ரைன் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்தியா எவ்வளவோ முயன்று பார்த்தும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும், ரஷ்யா - சீனா கூட்டணிக்கும் இடையே சமாதானம் ஏற்படவில்லை.
உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்தாத வரை எந்தவித சமாதானத்துக்கும் இடமே இல்லை என அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உறுதிப்பட தெரிவித்துவிட்டன.
உக்ரைன் விவகாரத்தில் முரணாக நிற்கும் நாடுகளுக்கு இடையே இந்தியா சமரசம் செய்து வைக்கும் என உலக நாடுகள் எதிர்பார்த்த நிலையில், அது தோல்வி அடைந்ததாகவே கருத வேண்டியுள்ளது.

நெருப்பை கக்கும் நாடுகள்
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போர் என்பது அந்த இரு நாடுகளையும் தாண்டி உலகம் முழுவதுமே பெரும் தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் வரிசைக்கட்டி நிற்கின்றன. இதற்கு எதிர் துருவத்தில் ரஷ்யா, சீனா என்ற இருபெரும் வல்லரசுகள் நிற்கின்றன. தற்போது இந்த இருதரப்பு நாடுகள் இடையே ஏற்பட்டிருக்கும் பனிப்போரானது, உலகப் பொருளாதாரத்திலும், ஸ்திரத்தன்மையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் உலகப்போர்
அதுமட்டுமல்லாமல், உக்ரைன் போரானது மீண்டும் ஒரு மிகப்பெரிய உலகப்போரை ஏற்படுத்திவிடும் என்ற சூழலும் நிலவுகிறது. ஏற்கனவே இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுக்கு ஆதரவாக எந்த நாடு நின்றாலும், ரஷ்யா அதை தனது எதிரியாகவே கருதும் என்றும், அணு ஆயுதங்களை பயன்படுத்த கூட தயங்க மாட்டோம் எனவும் அவர் எச்சரித்து வருகிறார். அமெரிக்காவும் எதற்கும் தயார் என்ற மனநிலையில் இருப்பதை உறுதியாக தெரிவித்துள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்துமே ஒருவித அச்சத்தில்தான் இருக்கின்றன.

ஜி20 மாநாடும் எதிர்பார்ப்பும்
இந்த சூழலில்தான், இந்தியாவின் தலைமையில் நடைபெறும் ஜி20 மாநாடு உலக நாடுகளின் கவனத்தை பெற்றது. உக்ரைன் போரால் ஏற்பட்டிருக்கும் இந்த அசாதாரண சூழலை இந்தியாவால் மட்டுமே தணிக்க முடியும் என சர்வதேச நாடுகள் நம்பிக்கை கொண்டிருந்தன. ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் இதனை வெளிப்படையாகவே தெரிவித்தன. ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் சிறந்த கூட்டாளியாக இந்தியா விளங்குவதால், இந்த நம்பிக்கையை உலக நாடுகள் வெளிப்படுத்தின. மேலும், அவ்வாறு சமசரம் எட்டப்பட்டால் உக்ரைன் போரும் முடிவுக்கு வரும் என கருதப்பட்டது.

இந்தியாவின் முயற்சி தோல்வி
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில், உக்ரைன் போரால் ஒன்றுக்கொண்டு எதிராக நிற்கும் நாடுகள் இடையே சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுட்டது. குறிப்பாக ரஷ்யா - சீனா நாடுகளுக்கும், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய - ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்தை கொண்டுவர இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், இருதரப்பு நாடுகளும் இதற்கு சிறிதும் உடன்பட மறுத்துவிட்டன. உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்தாதவரை சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தெளிவுப்படுத்தின. அதேபோல, உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்கும் வரை சமரசம் கிடையாது என ரஷ்யாவும் சீனாவும் உறுதியாக கூறிவிட்டன. இதனால் ஜி20 மாநாட்டில் வழக்கமாக அனைத்து நாடுகளும் இணைந்து வழங்கும் கூட்டறிக்கை கூட இந்த மாநாட்டில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
தமிழக இல்லதரசிகளுக்கு குட்நியூஸ்.. சமையல் அறைகளுக்கு நிம்மதி தரும் ரஷ்யக் கப்பல் -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications