டிரம்ப் சொல்வது பொய்.. மோடியிடம் பேசவே இல்லை.. அமெரிக்காவின் மூக்கை உடைத்த மத்திய அரசு
வாஷிங்டன்: ‛‛ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை விரைவில் நிறுத்துவதாக பிரதமர் மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளார்'' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கூறினார். ரஷ்யாவும், இந்தியாவும் நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் நிலையில் டிரம்பின் இந்த கருத்து சர்வதேச அரசியலில் பேசும் பொருளானது. இந்நிலையில் தான் மத்திய வெளியுறவுத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் டிரம்ப் பொய்யை அம்பலப்படுத்தி அவரது மூக்கு உடைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அவ்வப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது அவர் கூறும் தகவல்கள் பெரும் கவனம் பெறும். அந்த வகையில் தான் இன்று வெள்ளை மாளிகையில் டிரம்ப் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்குவது பற்றி கருத்து தெரிவித்தார். ரஷ்யாவும், நம் நாடும் நெருங்கிய நட்பு நாடாக உள்ள நிலையில் அதில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் அவரது கருத்து இருந்தது.
இதுபற்றி டொனால்ட் டிரம்ப் கூறியதாவது: ‛‛பிரதமர் மோடியுடன் எனக்கு சிறந்த உறவு இருக்கிறது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என அவர் உறுதியளித்துள்ளார். இந்தியாவால் அதை உடனடியாக செய்ய முடியாது என்று பிரதமர் மோடி தன்னிடம் கூறினார். ஆனால் இந்த செயல்முறை விரைவில் முடிவடையும்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சாஎண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சி அடையவில்லை. அதேபோல் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவையும் அதே காரியத்தை செய்ய வைப்பேன். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் இருந்து நான் ஒன்றை மட்டும் தான் விரும்புகிறேன். அவர் போரை நிறுத்த வேண்டும். உக்ரைன் மக்களை கொல்வதை நிறுத்த வேண்டும்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கவில்லை என்றால் போர் நிறுத்தம் எளிதாகும். இந்தியாவின் கச்சா எண்ணெய் கொள்முதல் மறைமுகமாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அதிகரிக்கிறது. தொடர்ச்சியான வர்த்தகம் பல மக்களை இழந்த இந்த அபத்தமான போரை ரஷ்யா தொடர அனுமதிக்கிறது'' என்றார்.
டிரம்பின் இந்த கருத்தை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை சார்பில், ‛‛அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் போனில் பேசிக்கொள்ளவே இல்லை. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இன்றியமையாதது. தேச நலனை கருத்தில் கொண்டு நாங்கள் முடிவுகளை எடுக்கிறோம்'' என்று கூறியுள்ளார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்தார். அதில் 25 சதவீதம் என்பது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் விதிக்கப்பட்டது. ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் மீதான போரை தொடர உதவி வருகிறது. இதனால் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று டிரம்ப் தொடர்ந்து கூறினார். ஆனால் நம் நாடு டிரம்பை மதிக்கவில்லை. அவரது பேச்சுக்கு செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது.
நம் நாட்டின் கச்சா எண்ணெய் பயன்பாட்டில் 36 சதவீதம் முதல் 38 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து தான் கிடைக்கிறது. இதனால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் அது நம் நாட்டுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி ரஷ்யாவுக்கு பதில் நம் நாடு மாற்று மார்க்கெட்டை தேட வேண்டி இருக்கும். இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கு டிமாண்ட் அதிகரித்து விலை கிடுகிடுவென அதிகரிக்கும்.
இதனால் டிரம்ப் எவ்வளவு தான் மிரட்டினாலும் நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாது என்கின்றனர் சர்வதேச நோக்கர்கள். இதனை இந்தியாவும் உறுதி செய்துள்ளது. நம் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்து விட்டது. ஆனால் இந்தியா - ரஷ்யா உறவை சிதைக்க விரும்பும் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து விரைவில் கச்சா எண்ணெயை வாங்குவதாக பிரதமர் மோடி கூறியுள்ளதாக கூறினார். இது பொய் என்று மத்திய வெளியுறவுத்துறை விளக்கமளித்து டிரம்பின் பித்தலாட்டத்தை அம்பலமாக்கி உள்ளது.
-
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.!












Click it and Unblock the Notifications