Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TikTok: இந்தியாவில் டிக்டாக் செயலி மீதான தடை நீக்கப்படுமா? - மத்திய அமைச்சர் சொன்ன பதில்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டிக்டாக் செயலி மீதான தடையை விலக்கக்கோரி எந்த பரிந்துரையும் அரசின் வசம் இல்லை என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலி மீண்டும் வரப்போவதாக அண்மைக்காலமாக தகவல்கள் பரவி வரும் நிலையில், மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கொள்கை காரணமாக டிக்டாக் உள்ளிட்ட பல சீன ஆப்களை இந்தியா தடை செய்தது. அப்போது இந்தியா சீனா இடையே மோதல் போக்கு ஏற்பட்டிருந்த நிலையில், மத்திய அரசால் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. தடை செய்யப்படுவதற்கு முன்பு, இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பேர் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

No Plans to Lift Ban on TikTok Confirms Union Minister Ashwini Vaishnaw

இந்நிலையில், கடந்த சில நாட்களாக டிக்டாக் செயலி மீதான தடை விலக்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. டிக்டாக் செயலியின் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ், குருகிராமில் உள்ள அலுவலகத்தில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகளை வெளியிட்டதால், இந்தியாவில் மீண்டும் டிக்டாக் செயலி பயன்பாட்டுக்கு வருமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போது வரை, இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலையே உள்ளது.

சமீபத்தில் சீன அதிபர் ஜின் பிங்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா சென்றார். அங்கு சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அமெரிக்கா இந்தியா மீது அதிக வரி விதித்ததால் இரு நாடுகளுக்கு இடையே உரசல் ஏற்பட்டுள்ள நிலையில், சீனா - இந்தியா மீண்டும் நெருங்கி வருவதாக கருதப்பட்டது.

இந்த பின்னணியில் தான், இந்தியாவில் டிக்டாக் செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வரப்போவதாக தகவல் பரவியது. பைட் டான்ஸ் நிறுவனம் குருகிராமில் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது இந்த தகவலுக்கு வலு சேர்த்தது. இந்நிலையில், இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னணி செய்தி தளத்துக்கு அளித்த பேட்டியில், டிக் டாக் சமூக ஊடகச் செயலியை மீண்டும் புதுப்பிக்கும் திட்டம் அதாவது, இந்தியாவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அரசுக்கு எந்த பரிந்துரையும் வரவில்லை. டிக்டாக் தடையை நீக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+