சோனியா சந்திப்புக்கு பிறகு சரத் பவார் சொன்ன அந்த வார்த்தை.. எப்படி தாங்கப்போகிறது சிவசேனா?
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் நடந்த ஆலோசனையின் போது, சிவசேனா தொடர்பாக விவாதிக்கவே இல்லை என்று ஒரே போடாக போட்டுள்ளார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார்.
மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகளில் எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில், தேர்தலுக்கு முன்பாக ஏற்படுத்தப்பட்ட பாஜக மற்றும் சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது.
ஆனால் முதல்வர் பதவி, உட்பட பிற அதிகாரப் பங்கீடு தொடர்பாக சரி சம பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்தது சிவசேனா. இதை பாஜக ஏற்கவில்லை.

குடியரசு தலைவர் ஆட்சி
இதனால், அங்கு யாரும் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது. சட்டசபை கலைக்கப்படவில்லை என்பதால் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு திறந்தே உள்ளது. தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து விடலாம் என சிவசேனா முயற்சித்து வருகிறது.

சோனியா காந்தி
இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், இன்று டெல்லியில் சோனியா காந்தியை அவர் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மகாராஷ்டிராவில் நிலவும், அரசியல் நிலைமை குறித்து சோனியா காந்தியுடன், நான் விரிவாக ஆலோசனை நடத்தினேன்.

அரசியல் பேசவில்லை
அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியும் உடன் இருந்தார். மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கவில்லை. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் நடுவேயான விவகாரங்களை மட்டுமே பேசுவதற்கான ஒரு சந்திப்பாக அமைந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
|
170 எம்எல்ஏக்கள்
அப்போது குறுக்கிட்ட நிருபர்கள், சிவசேனா கட்சி, தங்களுக்கு, 170 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறி உள்ளதே, என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சரத் பவார், 170 எண்ணிக்கை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் சிவசேனாவிடமே கேட்டு கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

அவரவர் பாணி
முன்னதாக, இன்று காலை மும்பையில் பேட்டியளித்தபோது, பாஜகவும் சிவசேனாவும் ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ளன. அவர்கள் வழியை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று அசால்டாக தெரிவித்தார் சரத் பவார். இதனால் காத்திருந்து காத்திருந்து, காலங்கள் போனதடி என பாடிக் கொண்டிருக்கிறது சிவசேனா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications