இனி ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை - நிர்மலா சீதாராமன் தந்த குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புதிய வருமான வரி விதிப்பு முறையில் இருப்போர் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் ஊதியம் அல்லது தொழில் செய்து வருவாய் ஈட்டினால் வருமான வரி செலுத்த தேவையில்லை என்று நேற்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் எவ்வளவு பேர் வருமான வரி செலுத்துவதில் இருந்து வெளியேறுகின்றனர்? என்பது பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரி செலுத்தும் முறையில் மாற்றம் கொண்டு வரப்படுமா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த எதிர்ப்பார்ப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளது.

budget 2025 union budget 2025 nirmala sitharaman 2025 2025

அதாவது நம் நாட்டை பொறுத்தவரை வருமான வரி செலுத்த 2 முறைகள் உள்ளன. ஒன்று பழைய வருமான வரி முறை. 2வது புதிய வருமான வரி முறையாகும். தற்போது மத்திய அரசு புதிய வருமான வரி முறையை தான் மக்கள் பின்பற்ற வேண்டும் என்ற வகையில் சலுகைகளை அறிவித்து வருகிறது.

மத்திய பட்ஜெட்டை நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி புதிய வருமான வரி திட்டத்தில் ரூ.12 லட்சம் வரை சம்பளம் அல்லது வருவாய் ஈட்டுவோர் இனி வரி கட்ட தேவையில்லை. அதோடு ரூ.75 ஆயிரம் வரை நிலையான கழிவும் கிடைக்கும். இதனால் ரூ.12.75 லட்சம் வரை வரி கட்ட தேவையில்லை. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.12 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்போர் என்று எடுத்து கொண்டால் அவர்களின் வருமானத்தில் முதல் ரூ. 4 லட்சம் முதல் ரூ. 8 லட்சத்துக்கு 5 சதவீதம், ரூ. 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சத்துக்கு 10 சதவீதம், ரூ. 12 லட்சம் முதல் ரூ. 16 லட்சத்துக்கு 15 சதவீதம், ரூ. 16 லட்சம் முதல் ரூ. 20 லட்சத்துக்கு 20 சதவீதம் மற்றும் ரூ. 24 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வருமான வரி கணக்கிடப்பட உள்ளது. இதனால் புதிய வருமான வரி முறையை பின்பற்றுவோர் இனி ரூ.12 லட்சம் வரை ஆண்டுக்கு சம்பாதிக்கும்போது வருமான வரி கட்ட தேவையில்லை.

முன்னதாக இந்த புதிய வருமான வரி முறையில் ரூ.7 வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி கட்ட வேண்டியது இல்லை என்ற நிலை இருந்தது. இப்போது இது ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துர்தர்ஷனுக்கு நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ‛‛ரூ.7 லட்சம் வரை வரி கட்ட தேவையில்லை என்பதை ரூ.12 லட்சம் வரை உயர்த்தி உள்ளதன் மூலம் எவ்வளவு மக்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து விடுபட்டு பயன்பெறுவார்கள்?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நிர்மலா சீதாராமன், ‛‛ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வருமான வரி செலுத்த வேண்டியிருக்காது'' என்று கூறியுள்ளார்.

அதேபோல், ‛‛இந்த தொடர் சலுகை அறிவிப்பால் எத்தனை பேர் பழைய வருமான வரி முறையில் இருந்து புதிய வருமான வரி முறைக்கு மாறி உள்ளனர்?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நிர்மலா சீதாராமன், வரி செலுத்துவோரில் 75 சதவீதம் பேர் பழைய வருமான வரி முறையில் இருந்து புதிய வருமான வரி முறைக்கு மாறிவிட்டினர். இப்போதும் பழைய வருமான வரி விதிப்பு முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் நாங்கள் அனைவரும் புதிய வருமான வரி முறைக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+