டெல்லிக்கு மிக அருகே ஹரியானாவின் கோரக்பூரில் உருவாகிறது வட இந்தியாவின் முதல் அணுமின் நிலையம்!
வட இந்தியாவில் ஹரியானாவில் முதலாவது அணுமின் நிலையம் அமைய உள்ளது.
டெல்லி: வட இந்தியாவின் முதல் அணுமின் நிலையம், தலைநகர் டெல்லிக்கு வடக்கே சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் ஹரியானாவில் உள்ள கோரக்பூரில் அமைக்கப்படுகிறது.
மத்திய அணுசக்தித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஹரியானா அணுமின் நிலையம் தொடர்பாக கூறியதாவது: முன்பு பெரும்பாலும் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் அல்லது நாட்டின் மேற்குப் பகுதியான மகாராஷ்டிரா போன்ற இடங்களில் மட்டுமே அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இந்தியாவின் அணுசக்தித் திறனை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், கடந்த 8 ஆண்டுகளில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 10 அணு உலைகளை நிறுவுவதற்கு ஒரே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கோரக்பூர் ஹரியானா அணு வித்யுத் பரியோஜனாவின் (GHAVP) இரண்டு அலகுகள் 700 மெகாவாட் திறன் கொண்டதாக முற்றிலும் உள்நாட்டு வடிவமைப்புடன் கூடிய அழுத்தப்பட்ட கனநீர் உலையுடன் (PHWR) ஹரியானாவில் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள கோரக்பூர் கிராமத்திற்கு அருகில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியான ரூ. 20,594 கோடியில் இதுவரை ரூ. 4,906 கோடி செலவிடப்பட்டுள்ளது.
நாட்டின் எதிர்கால நம்பிக்கைக்குரிய துறையான இந்த அணுசக்தித் துறை, இந்தியாவின் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்டது. அணுசக்தி ஆலைகளைத் திறப்பதற்கான ஆதாரங்களுக்காக, பொதுத்துறை நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகளை உருவாக்க அணுசக்தித் துறை அனுமதி அளித்துள்ளது. ஹரியானா உலைக்கான முக்கிய கட்டடங்கள், கட்டமைப்புகள், பாதுகாப்பு தொடர்பான பம்ப் ஹவுஸ் (SRPH), எரிபொருள் எண்ணெய் சேமிப்பு பகுதி-1 மற்றும் 2 (FOSA-1&2), காற்றோட்ட அடுக்கு, மேல்நிலை தொட்டி (OHT) போன்றவற்றுக்கான பணிகளில் நல்ல முன்னேற்றம் உள்ளது .
டர்பைன் கட்டடம் -1 மற்றும் 2, 220 கிலோ வாட் சுவிட்ச்யார்ட் மற்றும் ஐடிசிடி-1ஏ ஆகியவற்றுக்கான அடிப்படைப் பணிகள் முடிவுற்றுள்ளன. மற்ற பகுதிகளில் ஐடிசிடி-கள், 400 கேவி சுவிட்ச்யார்டு உள்ளிட்டவற்றின் அடிப்படைப் பணிகள் நடந்து வருகின்றன. முதன்மைக் குளிரூட்டி பம்புகள், கேலண்ட்ரியா, அணு உலை ஹெடர்கள், மாடரேட்டர் மற்றும் பிற டி20 வெப்பப் பரிமாற்றிகள் போன்ற முக்கிய உற்பத்தி உபகரணங்களுக்கான கொள்முதல் ஆணைகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எண்ட் ஷீல்டுகள் மற்றும் முதல் யூனிட்டுக்கான அனைத்து நீராவி ஜெனரேட்டர்களும் வாங்கப்பட்டுள்ளன. மற்ற உபகரணங்களின் உற்பத்தி பல்வேறு நிலைகளில் உள்ளது என்றும் கட்டுமான தளத்துக்கு குறித்த நேரத்தில் அவை கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹரியானா நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளத் துறை மூலம், குளிரூட்டுதலுக்கான நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நீர் குழாயின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கின்றன. இவ்வாறு மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications