இலவசங்கள் போதுமா? வளர்ச்சி பணிகளுக்கு பைசா கூட இருக்காது! தமிழக அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி
டெல்லி: தேர்தல் காலங்களில் மாநில அரசுகள் வழங்கும் இலவசத் திட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்தது. உணவு, மின்சாரம் போன்றவை தொடர்ந்து இலவசமாக வழங்கப்பட்டால், வளர்ச்சிப் பணிகளுக்கு எப்படி நிதி இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பட்ஜெட் பற்றாக்குறை கொண்ட மாநிலங்கள், வளர்ச்சிக்கு நிதியில்லை எனக் கூறிக் கொண்டே பல கோடி ரூபாயை மானியங்களுக்காகச் செலவழிப்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் விமர்சித்தது.
தமிழ்நாட்டில் வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிதிநிலையைக் கணக்கில் கொள்ளாமல் வழங்கப்படும் இலவச மின்சாரம் குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

உச்ச நீதிமன்றம்
அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுவது குறித்து இந்த வழக்கு தொடரப்பட்டது. குறிப்பாக வசதி படைத்தவர்களுக்கும் இலவசங்கள் வழங்கப்படுவது, 'வேலை செய்யாமல் வெகுமதி பெறுவது' போன்ற கலாச்சாரத்தை உருவாக்கி, பொதுமக்களின் உழைக்கும் மனப்பான்மையைப் பாதிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்தது.
மேலும், இலவசத் திட்டங்கள் எப்போதும் தேர்தலுக்கு முன்பு கடைசி நேரத்தில் அறிவிக்கப்படுவது ஏன் என்பதற்கும் மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.. இதுபோன்ற திடீர் அறிவிப்புகள், பட்ஜெட் கணக்கீடுகளில் கடும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
வசதி படைத்தோருக்கும் இலவசம்
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், "இந்தியா அளவில் நாம் என்ன மாதிரியான கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறோம்? காலை முதல் இலவச உணவு, பின் இலவசச் சைக்கிள், இலவச மின்சாரம், இப்போது நேரடியாக மக்கள் கணக்குகளில் பணம் செலுத்துகிறோம். இதைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பணம் செலுத்த முடியாதவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது நியாயமானது. ஆனால், வசதி உள்ளவர்கள், வசதி இல்லாதவர்கள் என வித்தியாசம் பார்க்காமல் இலவசங்களை விநியோகிக்கும்போது சிக்கல் வருகிறது.
சரமாரி கேள்வி
கல்வி கற்க வசதியில்லாத குழந்தைகளுக்கு அரசு உதவுவது கடமை. ஆனால், வசதியானவர்களும் இலவசங்களைப் பெறும்போது தான் கேள்வி எழுகிறது. அரசுகள் தங்கள் கொள்கை கட்டமைப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறோம். மாநிலத்தின் வருவாயில் குறைந்தபட்சம் கால் பகுதியாவது வளர்ச்சிப் பணிகளுக்குச் செலவிடப்பட வேண்டும். நீங்கள் வருவாய் உபரி மாநிலமாக இருந்தாலும்... பொதுமக்களின் நலனுக்காக உள்கட்டமைப்பு, மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மேம்படுத்துவது உங்கள் கடமை இல்லையா? அதற்குப் பதிலாக, தேர்தல் நேரத்தில் தொடர்ந்து இலவசங்களைத் தருகிறீர்கள்.
ஒரு பைசா இருக்காது
இத்தகைய கொள்கைகளால் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒரு பைசா கூட மிச்சமிருப்பதில்லை. இது தமிழ்நாட்டின் பிரச்சனை மட்டுமல்லாது, அனைத்து மாநிலங்களின் பிரச்சனையாக இருக்கிறது. இலவசத் திட்டங்களால் ஏற்படும் நிதிச்சுமை மாநிலங்களின் நீண்டகால வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக அமைகிறது" என்றார்.
தலைமை நீதிபதி சூர்ய காந்த் இலவசங்கள் குறித்து இதுபோன்ற கருத்துகளைக் கூறுவது இது முதல்முறை இல்லை. கடந்த ஜனவரியிலும், தலைமை நீதிபதி சூர்ய காந்த் இலவச திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இவை எதிர்காலச் சந்ததியினருக்கு நிலையற்ற சூழலை உருவாக்கலாம் எனக் கவலை தெரிவித்தார். அப்போது அவர், "இலவச மருத்துவ உதவி, இலவசக் கல்வி போன்றவை நல்லதுதான். ஆனால், நலத்திட்டங்களுக்குச் செலவழிப்பதற்குப் பதிலாக, இலவசப் பொருட்களுக்குச் செய்யப்படும் செலவுகள் என்பது ஆராயப்பட வேண்டிய பிரச்சனை" என்றார்.
-
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications