எந்த நியூக்ளியர் பவர் நாடும் செய்யாத சம்பவம்.. அமெரிக்கா கூட செய்ய அஞ்சும்.. இந்தியா ஆடிய தாண்டவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச அளவில் அணு ஆயுத பவர் கொண்ட நாடுகள் எதுவும் செய்யாத மிகப்பெரிய சம்பவத்தை இந்தியா செய்துள்ளது. அமெரிக்கா கூட செய்ய அஞ்சும் முக்கியமான சம்பவம் ஒன்றை இந்தியா செய்துள்ளது.

உலகில் 9 அணு ஆயுத பலம் கொண்ட நாடுகள் அதிகாரபூர்வமாக உள்ளன. அந்த லிஸ்டை முதலில் பார்க்கலாம்.

ரஷ்யா 5,889 அணு ஆயுத வார் ஹெட்கள் உள்ளன.

அமெரிக்கா 5,244 அணு ஆயுத வார் ஹெட்கள் உள்ளன.

சீனா 410-500+ அணு ஆயுத வார் ஹெட்கள் உள்ளன.

பிரான்ஸ் 290 அணு ஆயுத வார் ஹெட்கள் உள்ளன.

ஐக்கிய கிங்டம் 225 அணு ஆயுத வார் ஹெட்கள் உள்ளன.

பாகிஸ்தான் 170-180 அணு ஆயுத வார் ஹெட்கள் உள்ளன.

இந்தியா 160-170 அணு ஆயுத வார் ஹெட்கள் உள்ளன.

இஸ்ரேல் (அறிவிக்கப்படாதது) 80-90 அணு ஆயுத வார் ஹெட்கள் உள்ளன.

வட கொரியா 30-50 அணு ஆயுத வார் ஹெட்கள் உள்ளன.

Not even USA India did something that no nuclear power nation did to another nation

இந்த அணு ஆயுத நாடுகள் எதுவும் வேறு ஒரு அணு ஆயுத நாட்டின் உள்ளே இருக்கும் விமானதளங்களை தாக்கியது இல்லை. உதாரணமாக ஜப்பானை அமெரிக்கா தாக்கி இருக்கிறது. ஆனால் ஜப்பானிடம் அணு ஆயுதம் இல்லை. ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தாக்கி உள்ளது. ஆப்கானிஸ்தானிடம் அணு ஆயுதம் இல்லை.

உக்ரைன் நாட்டின் உள்ளே இருக்கும் விமானதளங்களை ரஷ்யா தாக்கி உள்ளது. ஆனால் உக்ரைனிடம் அணு ஆயுதம் இல்லை. இப்படி அணு ஆயுதம் கொண்ட 9 நாடுகள் எதுவும் வேறு அணு ஆயுதம் கொண்ட நாட்டின் விமானப்படை தளத்தில் கைவைத்ததே இல்லை. ஏனென்றால் அது அணு ஆயுத போரை இது உருவாக்கும்.

ஆனால் இன்று அதை எல்லாம் மீறி அமெரிக்கா ரஷ்யா கூட செய்யாத சம்பவத்தை இந்தியா செய்துள்ளது. அணு ஆயுதம் கொண்ட இந்தியா இன்னொரு அணு ஆயுதம் கொண்ட பாகிஸ்தான் போன்ற நாட்டின் விமானப்படை தளத்தை ஏவுகணை மூலம் தாக்கி உள்ளது. அதுவும் ஒன்றல்ல 4 தளங்களை தாக்க அழித்துள்ளது.

இந்திய ஏவுகணைகளால் விமானப்படை தளங்கள் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்து உள்ளது. இன்று அதிகாலை 4 மணி முதல் அடுத்தடுத்து தங்களின் விமானப்படை தளங்கள் இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. நூர் கான் தளம், முரித் தளம் மற்றும் ஷோர்கோட் தளம் ஆகியவை தாக்கப்பட்டது என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரீப் சவுத்ரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

இந்திய ராணுவத்தால் தகர்க்கப்பட்ட விமானப்படை தளங்கள் பின்வருமாறு,

நூர் கான் விமான தளம், ராவல்பிண்டி
PAF ரஃபிகி விமான தளம், ஷோர்கோட்
⁠PAF முரிட் விமான தளம், சக்வால்

இந்த தாக்குதல் மூலம் பாகிஸ்தானின் அடிமடியில் இந்தியா கைவைத்துள்ளது என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் இந்த தளங்கள் அனைத்தும் பாகிஸ்தானின் முதுகெலும்பாக கருதப்படும் ராணுவ அமைப்புகள் ஆகும். பாகிஸ்தானுக்கு இது மிகப்பெரிய பேரிடியாக மாறி உள்ளது. டிரோன்கள் தொடங்கி போர் விமானங்கள் வரை பலவற்றை டேக் ஆப் செய்ய இது போன்ற விமானப்படை தளங்கள் தேவை.அவை அழிக்கப்பட்டு வருவதால் பாகிஸ்தான் சிவிலியன் விமானப்படை தளங்களை பயன்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+