7 மாநிலங்கள் உருவான நாள் நவம்பர் 1- கர்நாடகா மாநில தனி கொடி ஏற்றி கொண்டாடிய சித்தராமையா!
டெல்லி: கர்நாடகா, கேரளா, ஆந்திரா உட்பட 7 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் இன்று 'மாநிலம்' உருவான நாளை எழுச்சியுடன் கொண்டாடின. கர்நாடகா தலைநகர் பெங்களூரில் கர்நாடகா மாநிலத்துக்கான தனி கொடியை ஏற்றி கொண்டாடினார் முதல்வர் சித்தராமையா.
நாடு விடுதலை அடையும் போது இந்தியா பல்வேறு சமஸ்தானங்களாக, மாகாணங்களாக இருந்தன. நமது சென்னை மாகாணமானது இன்றைய கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிஷா மாநிலத்தின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. ஒடிஷாவின் கோரபுட் மாவட்டம் அன்றைய சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது.

பொட்டி சிறீராமுலு: ஆனால் நாடு விடுதலைக்குப் பின்னர் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. சென்னை மாகாணத்தில் இருந்து தெலுங்கு மக்கள் வாழும் பகுதிகளை பிரித்து தனி ஆந்திரா மாநிலம் கோரி பொட்டி சிறீராமுலு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர் தியாகம் செய்தார் (1952).
புதிய மாநிலங்கள் உருவாக்கம்: இதனைத் தொடர்ந்து 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. மைசூர் மாகாணம், கூர்க், சென்னை மாகாணம், மாகாணத்தின் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ல் கர்நாடகா தனி மாநிலம் உருவானது. அப்போது மைசூர் மாகாணம் என அழைக்கப்பட்டது. 1973-ம் ஆண்டு மைசூர் மாகாணத்தின் பெயர் கர்நாடகா என பெயர் மாற்றப்பட்டது. இதன் பொன்விழா ஆண்டு கர்நாடகா முழுவதும் ஓராண்டுக்கு எழுச்சியுடன் கொண்டாடப்பட உள்ளது. கர்நாடகாவில் நவம்பர் 1-ந் தேதி Rajyotsava Day என்ற பெயரில் மாநிலம் உருவான நாள் கொண்டாட்டங்கள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். கர்நாடகா மாநிலத்துக்காக உருவாக்கப்பட்ட தனி கொடியுடன் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும். இதேபோல 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ல் ஆந்திரா, கேரளா, மத்திய பிரதேசம், ஹரியானா மாநிலங்களும் புதுச்சேரி (1954), லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன.

தமிழர் இழந்த நிலம்: சென்னை மாகாணத்தில் தமிழர் வாழ்ந்த பல பகுதிகளும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களுடன் இணைந்துவிட்டன. இன்றைக்கும் இந்த பகுதிகளை தாய் தமிழ்நாட்டுடன் இணைக்க கோரும் போராட்டங்களை பல்வேறு கட்டங்களில் அம்மக்கள் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டின் இந்த மாநிலங்களில் இணைக்கப்பட்ட எல்லை பகுதிகளை மீட்பதற்காக 'வடக்கெல்லை' போராட்டம், தென் எல்லை போராட்டங்கள் சரித்திரம் பேசும் பக்கங்களாக நிற்கின்றன.
புதுச்சேரியில் விடுமுறை: 2000-ம் ஆண்டு நவம்பர் 1-ல் சத்தீஸ்கர் தனி மாநிலம் உருவானது. 1966-ல் கிழக்கு பஞ்சாப் மாகாணம் பிரிக்கப்பட்டு பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் உருவாகின. புத்துச்சேரி மாநிலத்தில் மாநிலம் உருவான நாளை முன்னிட்டு இன்றும் நாளையும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Karnataka CM Siddaramaiah takes part in Karnataka Rajyotsava celebrations at Bengaluru's Kantheerava Stadium pic.twitter.com/qLHxlFBAQm
— ANI (@ANI) November 1, 2023
கர்நாடகா: கர்நாடகா Rajyotsava நாள் இன்று கொண்டாடப்பட்டது. பெங்களூர் கந்த்வீரா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசியக் கொடி, கர்நாடகா கொடி ஆகியவற்றை முதல்வர் சித்தராமையா ஏற்றினார்.
#WATCH | Vijaywada: Andhra Pradesh Chief Minister YS Jagan Mohan Reddy participates in the Formation Day celebration program and hoists the national flag at the Camp Office, Tadepalli. pic.twitter.com/iFyCzHzU1L
— ANI (@ANI) November 1, 2023
ஆந்திரா: ஆந்திரா மாநிலம் உருவான நாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று நடைபெற்றது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முகாம் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி ஆந்திரா உருவான நாள் கொண்டாடப்பட்டது.












Click it and Unblock the Notifications