Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நபியை அவமதித்த "நுபுர்".. திரண்டு வந்த இஸ்லாமிய நாடுகள்! ஆக்சன் எடுத்த பாஜக! உண்மையில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இஸ்லாமிய இறை தூதுவர் நபிகளை இகழ்ந்து பேசிய நிலையில் பாஜகவில் இருந்து நுபுர் சர்மா நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக இருந்த இவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன் என்ன நடந்தது.. இஸ்லாமிய நாடுகள் இவரை எதிர்க்க என்ன காரணம் என்று பார்க்கலாம்.

Recommended Video

    Nupur Sharma-வை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கிய BJP.. என்ன நடந்தது? #Politics

    நுபுர் சர்மா இதற்கு முன்பே பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியவர் என்றாலும்.. சமீபத்தில் விவாத நிகழ்ச்சி ஒன்றில்., இஸ்லாமிய பங்கேற்பாளரிடம் பேசும் போது நபிகளை கடுமையாக இகழ்ந்து பேசினார். சில தவறான வார்த்தைகளை பயன்படுத்தி நபிகளை நுபுர் சர்மா இகழ்ந்து பேசினார்.

    அப்போது நெறியாளராக இருந்தவரும் நுபுர் சர்மா பேசியதை இயல்பாக கேட்டார். அவர் பேசியது தவறு இல்லை என்பது போல நெறியாளர் பேசினார்.

    தொலைக்காட்சியில் பேசினார்

    தொலைக்காட்சியில் பேசினார்

    இவரின் இந்த நிகழ்ச்சியை யாரும் அப்போது பெரிதாக கவனிக்கவில்லை. இந்த நிலையில் altnews எனப்படும் fake newsகளை கண்டுபிடிக்கும் நிறுவனத்தின் நிறுவனர் முகமது சுபையர் என்பவர் நுபுர் சர்மா வீடியோவை அப்படியே வெளியிட்டார். நபிகள் பற்றி நுபுர் தவறாக பேசி உள்ளார். இதுதான் பாஜகவின் நிலைபாடா..? நபிகளை அவர் மோசமாக இகழ்ந்து இருக்கிறாரே என்று கேட்டார். இதன்பின்புதான் நுபுர் சர்மா பேசியது இணையம் முழுக்க வைரலானது.

    சுப்பையர் வீடியோ

    சுப்பையர் வீடியோ

    தேசிய கட்சியை சேர்ந்த ஒருவர், அதுவும் ஆளும் கட்சியின் செய்தி தொடர்பாளர் இப்படி பொது இடத்தில் ஒரு மதத்தின் இறை தூதுவரை பற்றி பேசியது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், நான் அப்படிப்பட்ட கருத்துக்களை பேசவே இல்லை என்று அவர் மறுத்தார். அதோடு சுபையர் என்னுடைய வீடியோவை எடிட் செய்து போட்டுவிட்டார் என்றும் நுபுர் சர்மா மறுத்தார். ஆனால் பின்னர் நுபுர் சர்மா நபியை இகழ்ந்து பேசியது உண்மைதான் என்றும் உறுதியானது.

    போராட்டம் கலவரம் வழக்கு

    போராட்டம் கலவரம் வழக்கு

    இந்த நிலையில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியர்கள் சார்பாக போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இதில் 40 பேருக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். பிரதமர் மோடி கான்பூர் அருகே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அங்கிருந்து 80 கிமீ தொலைவில்தான் இந்த கலவரம் நடந்தது. இந்துக்கள் இஸ்லாமியர்கள் இடையே மோதல் பெரிதான் நிலையில் 36 பேர் இதில் கைது செய்யப்பட்டனர். 1500 பேர் மீது இதில் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இது போக நுபுர் சர்மா மீது மகாராஷ்டிராவில் பல்வேறு நபர்களால் வழக்கும் தொடுக்கப்பட்டது. இன்னொரு பக்கம் நுபுரை தொடர்ந்து தொடர்ந்து நவீன் குமார் ஜிண்டாலும்புர் சர்மாவிற்கு ஆதரவாக பேசும் வகையில் ட்விட் செய்து இருந்தார். நபிகளை விமர்சனம் செய்து அவர் ட்விட் செய்தார்.

    கத்தார் புறக்கணிப்பு

    கத்தார் புறக்கணிப்பு

    இந்த நிலையில் இந்தியாவின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று கத்தாரில் இஸ்லாமியர்கள் போராட்டம் செய்ய தொடங்கினார்கள். இந்தியாவில் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். பாருங் பாஜகவின் மூத்த நிர்வாகி நபியை இகழ்ந்து பேசி உள்ளார். அதனால் இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று கத்தாரில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதோடு மால்கள் பலவற்றில் இந்தியாவில் இருந்து வந்த பொருட்கள் துணி போட்டு மூடப்பட்டு, அதை புறக்கணிக்க வேண்டும் என்றும் நோட்டிஸ் ஒட்டப்பட்டது.

    விளக்கம் கேட்டு சம்மன்

    விளக்கம் கேட்டு சம்மன்

    இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம், கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மீட்டலிடம் கத்தார் சார்பாக விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு கத்தார் வெளியுறவுத்துறை அளித்த சம்மனில், இஸ்லாமியர்களை கோபம் அடைய செய்யும் வகையில் கருத்து தெரிவித்த உறுப்பினரை ஆளும் இந்திய அரசு நீக்கியதை வரவேற்கிறோம். அதே சமயம், இந்திய அரசாங்கம் , சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும். உடனடி கண்டனத்தை வெளியிட வேண்டும். இது போன்ற இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துவிட்டு, எந்த தண்டனையும் இல்லாமல் ஒருவர் இருப்பது, மிகப்பெரிய மனித உரிமை மீறலை உங்கள் நாட்டில் ஏற்படுத்தும். அதோடு ஏற்கனவே உங்கள் நாட்டில் ஒதுக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களை மேலும் ஒதுக்க, அவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்த இது வழி வகுக்கும், என்று அறிக்கையில் கூறப்பட்டது.

    துணை குடியரசுத் தலைவர்

    துணை குடியரசுத் தலைவர்

    சரியாக துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கத்தார் சென்ற நிலையில் இந்த சம்மன் வந்தது பெரிய சர்ச்சையானது. இதையடுத்து, தனிப்பட்ட வகையில் பாஜக சார்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது, எந்த மதத்தை சேர்ந்த தலைவர்களையும் விமர்சிப்பதை பாஜக ஏற்றுக்கொள்ளாது என்று பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேபோல் எந்த பிரிவையும், மதத்தையும் இகழ கூடிய கொள்கைகளையும் பாஜக கடுமையாக எதிர்க்கிறது. அது போன்ற கருத்துக்கள், கொள்கைகளை, நபர்களை பாஜக என்றும் ஆதரிக்காது. இந்திய அரசியலமைப்பு சட்டம் எப்போது, எல்லோருக்கும், தங்களுக்கு பிடித்த மதத்தை பின்பற்றவும், பிடித்த மதத்தை பின்பற்றி வாழவும், மற்ற மதங்களை மதிக்கவும் வழி செய்து கொடுத்துள்ளது, என்று கூறப்பட்டது.

    நீக்கம்

    நீக்கம்

    இதையடுத்தே நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பாஜகவின் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர் மீது கட்சி ரீதியாக விசாரணை நடத்தப்படும். அதுவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்று பாஜக சார்பாக தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் அதுவரை நபியை இகழவில்லை என்று கூறிய நுபுர் சர்மாவும், தான் பேசிய கருத்துக்களை திரும்ப பெறுவதாகவும், அதே சமயம் இந்து கடவுளான சிவனை பலர் இகழ்வதை யாரும் கேட்கவில்லை என்றும் விமர்சனம் வைத்தார்.

    இந்தியா விளக்கம்

    இந்தியா விளக்கம்

    இந்த நிலையில்தான் கத்தாரின் சம்மனுக்கு இந்திய வெளியுறவுத்துறை சார்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தது தனி நபர்கள்தான். இந்த கருத்துக்கள் எதுவும், எந்த வகையிலும் இந்திய அரசின் கருத்துக்கள் கிடையாது. இவை கழகத்தை ஏற்படுத்தும் (fringe element) நபர்களின் கருத்துக்கள்தான். இந்தியா அனைத்து மதங்களையும் மதிக்கிறது. ஏற்கனவே அந்த கருத்துக்களை தெரிவித்த நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. அதேபோல் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது என்று விளக்கம் அளித்தது.

    ஈரான், குவைத்

    ஈரான், குவைத்

    இந்த விவகாரம் இன்னும் முடியாத நிலையில் தற்போது இதே விளக்கத்தை கேட்டு ஈரான், குவைத் இந்தியாவிற்கு சம்மன் அனுப்பி உள்ளது. இவை எல்லாம் இந்தியாவின் நட்பு நாடுகள். எண்ணெய் வள ரீதியாகவும், ஏற்றுமதி, இறக்குமதி ரீதியாகவும் இந்தியாவிற்கு நெருக்கமான நாடுகள். இந்த நாடுகள் இப்படி இந்தியாவிற்கு எதிராக ஒன்றாக திரண்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்ற இஸ்லாமிய நாடுகளும் இந்தியாவிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்க வாய்ப்புகள் உள்ளன. மத்திய பாஜக அரசு இதை எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+