டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூது போன ஓபிஆர்! மேலிடத்தில் "டீல்" செய்யும் ஓபிஎஸ்! மோடியையே சந்திக்க முடிவு? 3 மெகா பிளான்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சென்று இருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அங்கு பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக ஓபிஎஸ் தரப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதாம்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. தமிழக சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு கட்சியின் பொதுக்குழுவில் ஒட்டுமொத்த தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஜூலை 11-ல் அதிமுகவின் பொதுக்குழு மீண்டும் கூடும் என அறிவித்தார்.

சென்னையில் சசிகலா வீடு முன்பு திடீரென குவிந்த அதிமுக தொண்டர்கள்- ஓபிஎஸ்,ஈபிஎஸ்-க்கு எதிராக முழக்கம்!சென்னையில் சசிகலா வீடு முன்பு திடீரென குவிந்த அதிமுக தொண்டர்கள்- ஓபிஎஸ்,ஈபிஎஸ்-க்கு எதிராக முழக்கம்!

டெல்லி

டெல்லி

இந்த நிலையில் நேற்று பொதுக்குழு முடிந்தது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். நேற்று மாலை தனது மகன் ஓ பி ரவீந்திரநாத்துடன் அவர் விமானம் ஏறினார். இந்த பயணத்திற்கு காரணம் என்ன என்று கேட்ட போது.. குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவிற்கான ஆதரவு தொடர்பாக பேச டெல்லி செல்கிறேன். வேறு காரணம் இல்லை. வெயிட் அண்ட் வாட்ச் என்று கூறினார் ஓபிஎஸ். இந்த நிலையில்தான் இன்று ஓ பன்னீர்செல்வம் அங்கு பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

டெல்லி பிளான்

டெல்லி பிளான்

இதற்காக ஓபிஎஸ் தரப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதாம். அதன்படி தனது மகனுக்கு நெருக்கமாக இருக்கும் பாஜக நிர்வாகிகளை இன்று ஓபிஎஸ் சந்திக்க இருக்கிறாராம். இந்த சந்திப்பு தொடர்பாக ஓ பி ரவீந்திரநாத் தூது சென்றதாக கூறப்படுகிறது. பாஜக அமைச்சர்கள் சிலரை சந்திக்க அவர் முயன்று வருகிறார் என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் சிடி ரவி மூலம் டெல்லியில் உள்ள வேறு சில தலைகளை சந்திக்கவும் ஓபிஎஸ் முயன்று வருகிறாராம்.

சந்திக்க நேரம்

சந்திக்க நேரம்

இன்று பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இன்று மாலைக்குள் அவரை எப்படியாவது 10 நிமிடமாவது சந்திக்க ஓபிஎஸ் முயன்று வருகிறாராம். ஓபிஎஸ் மீது மோடிக்கு எப்போதும் தனி பிரியம் உண்டு. தமிழ்நாடு வரும் போதெல்லாம் ஓபிஎஸ்ஸை மோடி சந்தித்து அன்பாக பேசி இருக்கிறார். ஓபிஆர் மீதும் மோடிக்கு தனி அன்பு உண்டு. இந்த நிலையில்தான் மோடியை சந்திக்க ஓபிஎஸ் சென்றுள்ளார்.

மூன்று கோரிக்கை

மூன்று கோரிக்கை

இந்த சந்திப்பில் மூன்று முக்கிய கோரிக்கைகளை ஓபிஎஸ் வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவில் சமரசம் பேச வேண்டும் - முதல் கோரிக்கை

ஒற்றை தலைமை கூடாது - இரட்டை தலைமை நீடிக்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் - இரண்டாம் கோரிக்கை

டெல்லி பாஜக நேரடியாக தலையிட்டு தனக்கு ஆதரவாக தமிழ்நாடு அதிமுக தலைகளிடம் பேச வேண்டும் - மூன்றாவது கோரிக்கை.

என்ன சொல்வார்

என்ன சொல்வார்

இந்த சந்திப்பில்... நீங்கள் சொல்லித்தான் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன். நீங்கள் கொடுத்த வாக்கு காரணமாகவே துணை முதல்வர் பதவியை ஏற்று எடப்பாடியுடன் சமாதானமாக சென்றேன். ஆனால் இப்போதே என்னை ஓரம் கட்டுகிறார்கள். நீங்கள்தான் இதில் தலையிட வேண்டும் என்று ஓபிஎஸ் பிரதமர் மோடியிடம் முறையிட இருக்கிறாராம். நான் இருந்தால் பாஜக - அதிமுக கூட்டணி நிலைக்கும். எடப்பாடி இருந்தால் அதற்கு வாய்ப்பு இல்லை என்றும் ஓபிஎஸ் பிரதமர் மோடியிடம் கூற இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

English summary
O Panneerselvam asks time to meet PM Modi today amid the tussle in AIADMK party. டெல்லி சென்று இருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அங்கு பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X